தொடரும் போலீஸ் அராஜகம்! சட்டக்கல்லூரி மாணவனை நிர்வாணமாக வைத்து விடிய விடிய காவல் அதிகாரி செய்த வெறி செயல்!

0
80
Police anarchy to continue! Vidya Vidya police officer's hysterical act of keeping a law college student naked!
Police anarchy to continue! Vidya Vidya police officer's hysterical act of keeping a law college student naked!

தொடரும் போலீஸ் அராஜகம்! சட்டக்கல்லூரி மாணவனை நிர்வாணமாக வைத்து விடிய விடிய காவல் அதிகாரி செய்த வெறி செயல்!

போலீசார் பலர் தங்கள் பதவியை வைத்து பல அராஜகங்கள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். அதனை தடுக்கும் வகையில் பல சட்டங்கள் இயற்றப்பட்டாலும் இன்றளவும் அவர்களது அராஜகம் முடிவுரவில்லை. அந்த வகையில் சென்னையில் தற்போது ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் அப்துல் ரஹீம். இவர் தரமணியில் உள்ள சட்டப் பல்கலைக்கழகத்தில் ஐந்தாம் ஆண்டு படித்து வருகிறார். இவரின் குடும்ப சூழல் காரணமாக கல்லூரியில் படித்துக்கொண்டு பகுதி நேர வேலையும் செய்து வருகிறார். அவ்வாறு பகுதி நேர வேலை செய்துவிட்டு இரவு 11 மணியளவில் வீடு திரும்பியுள்ளார்.

அப்பொழுது சாலையில் இருந்த போலீசார் இவரை வழிமறித்து நீ முக கவசம் அணிய வில்லை அபராதம் கட்ட வேண்டும் என கூறியுள்ளனர். ரஹீமா நான் முகக்கவசம் அணிந்து உள்ளேன் நான் ஏன் அபராதம் கட்டவேண்டும் என்று வாக்குவாதம் செய்துள்ளார். இருவருக்கு இடையே வாக்குவாதம் அதிகரித்து போலீசார் ரஹீம் தங்களை தாக்க முயன்றதாக கூறி கைது செய்துள்ளனர். பின்பு அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அடித்து துன்புறுத்தி உள்ளனர்.போலீசார் அளித்த கொடுமைகளை கூறி ,ரஹீம் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரில் நான் சம்பவம் நடந்த அன்று முக கவசம் அணிந்து வந்தேன். ஆனால் சரியான படி அணியவில்லை என போலீசார் அபராத தொகை கட்டும்படி கட்டாயப்படுத்தினர். அதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்பு அங்கு இருந்த காவல்துறை அதிகாரி என்னை தகாத வார்த்தைகளால் திட்டினார். பின்பு என் மீது வழக்கு பதிவு செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு இரவு முழுவதும் என்னை தூங்கவிடாமல் நிர்வாணமாக என்னை அடித்து துன்புறுத்தினார்.

அதுமட்டுமின்றி என் மீது சிறுநீர் கழித்து அதீத மன வேதனைக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் அங்கிருந்த போலீசார் அவரது பூட்ஸ் காலால் தனது மார்பில் எட்டி உதைத்து காயப்படுத்தியுள்ளார். இவர்கள் இவ்வாறு அடுத்த தான் காரணமாக எனது கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளார். அதேபோல உணவு வாங்கி கொடுத்தும் அதனை உண்ண விடாமல் கொடுமை செய்தனர். இவ்வாறு தன்னை துன்புறுத்திய காவலர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் ரஹீம் கூறியுள்ளார்.

வருடம்தோறும் போலீஸாரின் அராஜகம் முற்றுப்புள்ளி இன்றி தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.போலீசார் செய்த அராஜகத்தை எடுத்து கூறும் வகையில் ஜெய் பீம் படம் உருவாக்கப்பட்டது. அப்படத்தில் நடந்தது போலவே தற்பொழுது ஒரு சம்பவம் அரங்கேறியிருப்பது அனைவரையும் கோபமுற செய்கிறது.