இனி ATM கார்டே தேவையில்லை!! போன் மட்டும் போதும் ஈஸியா பணம் எடுக்கலாம்!!
நாடு முழுவதும் தற்போது பணத்தை யுபிஐ மூலமாக அனுப்பி வருகின்றனர். உலகம் முழுவதும் யுபிஐ பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது.
மற்ற நாடுகளை ஒப்பிட்டு பார்ர்கும் போது இந்தியா தான் இந்த ஆன்லைன் பண பரிமாற்றத்தில் முதலிடமாக உள்ளது. அனைத்து வகையான செயல்பாடுகளுக்கும் தற்போது யுபிஐ முறை கொண்டு வரப்பட்டுள்ளது.
மிகப்பெரிய அரசு நிறுவனங்கள் முதற்கொண்டு சிறிய கடைகள் வரை அனைவரும் இந்த யுபிஐ செயல்பாட்டை பயன்படுத்தி வருகின்றனர். மக்கள் நாள்தோறும் இந்த யுபிஐ பயன்பாட்டை பயன்படுத்தி வந்த நிலையில், இந்த பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம் போடப்பட்டது.
இந்த கட்டணம் இரண்டு ஆயிரத்துக்கும் மேல் பிபிஐ முறையில் பணம் அனுப்பினால் விதிக்கப்படும் என்று கூறப்பட்டது. நாடு முழுவதும் இந்த யுபிஐ பயன்பாடு தலை தூக்கியதால், ஏடிஎம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைந்து உள்ளது.
யுபிஐ இல்லாத அல்லது இது வேலை செய்யாத நேரங்களில் மட்டுமே மக்கள் இந்த ஏடிஎம் கார்டை பயன்படுத்துகின்றனர். எனவே, இதில் புதிய அப்டேட்டாக ஏடிஎம் கார்டே இல்லாமல் ஏடிஎம்-யில் பணம் எடுக்கும் முறை வந்துள்ளது.
இதற்கு முதலில் நீங்கள் உங்களின் வங்கி மொபைல் பேங்கிங் செயலியை போனில் வைத்திருக்க வேண்டும். ஏடிஎம்-யில் கார்ட்டெல்ஸ் கேஷ் யை கிளிக் செய்ய வேண்டும்.
அதன்பிறகு எவ்வளவு பணம் எடுக்க வேண்டும் என்பதை போட வேண்டும். இதனைத் தொடர்ந்து ஏடிஎம்-யில் தோன்றும் QR கோர்டை நம் மொபைலில் ஸ்கேன் செய்ய வேண்டும்.
இதற்கு நம்மிடம் இருக்கும் அந்த பேங்கிங் செயலியில் QR cash withdrawal –ஐ ஓப்பன் செய்து ஸ்கேன் செய்ய வேண்டும். பிறகு ஏடிஎம்-யில் பணம் நமக்கு வந்துவிடும்.
நம்மிடம் ஏடிஎம் இல்லாத சமயங்களிலும் இவ்வாறு நாம் பணம் எடுத்துக் கொள்ளலாம்.