இனி ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தேவையில்லை!!! வருகிறது தைவானின் புதிய கோகோரோ எலக்ட்ரிக் வேய்க்கல்!!!

இனி ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தேவையில்லை!!! வருகிறது தைவானின் புதிய கோகோரோ எலக்ட்ரிக் வேய்க்கல்!!!
ஓலா, ஊபர், ஏதர் போன்ற எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற்றாக விலை குறைவான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று இந்திய சந்தையில் அறிமுகம் ஆகியுள்ளது. குறைந்த விலையில் எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.
இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. தற்பொழுது உள்ள காலத்தில் பெட்ரோல் விலையை கருத்தில் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக அனைவரும் மின்சார வாகனத்திற்கு மாறி வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் ஏற்கனவே எலக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் நிறைய உள்ளது. அந்த வகையில் தற்பொழுது தைவான் நாட்டில் இருந்து கோகோரோ என்ற நிறுவனம் குறைந்த விலையில் எலக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்வதற்கு வருகின்றது.
கோகோரோ நிறுவனம் தைவானை சேர்ந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் தற்பொழுது இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனை செய்ய தர்கா வருகின்றது. கோகோரோ GX250 என்று இந்த எலக்ட்ரிக் வாகனங்களுக்கு பெயர் வைக்கப்பட்டு உள்ளது.
கோகோரோ GX250 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 7 கிலோ வாட் பேட்டரி வசதியுடன் வருகின்றது. மேலும் இந்த ஸ்கூட்டர் 60 கிலோ மீட்டர் வேகம் வரை இயக்க முடியும். கோகோரோ GX250 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒரு முறை முழுவதுமாக சார்ஜ் செய்ய மூன்று மணி நேரம் ஆகும். அவ்வாறு முழுவதுமாக சார்ஜ் செய்து விட்டால் 112 கிலோ மீட்டர் வரை செல்ல முடியும்.
இந்த கோகோரோ GX250 ஸ்கூட்டரின் விலை குறித்து தகவல் வெளியாகாத நிலையில் 60000 ரூபாயாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த கோகோரோ GX250 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் அல்லது பிப்ரவரி மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. மேலும் 2024ம் ஆண்டில் இந்தியாவில் நடைபெறவுள்ள ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சியில் இந்த கோகோரோ GX250 ஸ்கூட்டர் வெளியிடப்பட வாய்ப்புகள் உள்ளது.
இந்த கோகோரோ GX250 ஸ்கூட்டரில் உள்ள வசதிகளை வைத்து பார்க்கும் பொழுது இது மிகவும் விலை குறைவானதாக இருக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.  மேலும் கோகோரோ நிறுவனம் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டருடன் சேர்த்து மேலும் மூன்று மாடலில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
அதன்படி கோகோரோ டிலைட், கோகோரோ  விவா, கோகோரோ எஸ் 1 போன்ற மாடல்களையும் இந்தியாவில் கோகோரோ நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. இந்நிலையில் ஓலா, ஏதர் மற்றும் இந்தியாவில் உள்ள எலக்ட்ரிக் வாகனங்களின் நிறுவனங்களுக்கு போட்டியாக தைவானின் கோகோரோ நிறுவனம் களமிறங்கவுள்ளது.