இனி ஒரு ரூபாய் கூட செலவு செய்ய தேவை இல்லை!! வீட்டில் இருந்தே சியாட்டிக் பிரச்சனையை சரி செய்யலாம்!

0
201
#image_title

இனி ஒரு ரூபாய் கூட செலவு செய்ய தேவை இல்லை!! வீட்டில் இருந்தே சியாட்டிக் பிரச்சனையை சரி செய்யலாம்!

 

இன்றைய காலகட்டத்தில் மோசமான உணவுப் பொருட்களும் உடல் உழைப்பில்லாமல் செய்யப்படும் வேலைகளும் நமது உடலின் ஊட்டச்சத்து குறைபாட்டை ஏற்படுத்துகின்றது.

 

இதனால் எலும்புகள் பாதிக்கப்படுவதோடு நிறைய உடல்நலம் சார்ந்த பிரச்சினைகளும் வருகின்றது.

 

அதுமட்டுமல்லாமல் உடலின் செயல்பாடுகள் குறைவதனால் தசை பிடிப்புகள் நரம்பு வலி போன்றவை ஏற்படுகின்றது.

 

அதிலும் குறிப்பிட்டு சொல்லப்போனால் சியாடிக்கா என்ற நரம்பு வலி நம்மில் பலருக்கும் ஏற்படுகின்றது அது ஆண்களை விட பெண்களை தான் மிகவும் அதிக அளவு பாதிக்கின்றது.

 

பெண்களுக்கு உடல் பலவீனம் குறைவதால் அனைத்து நோய்களும் சுலபமாக வருகின்றது.

 

அப்படி வரும் நரம்பு பிரச்சனைகளில் மிகவும் குறிப்பிட்டு கூறப்படுவதாக இந்த சிஆர்டிக் வலியை கூறலாம் அப்படி இந்த சியாடிக் வழி என்றால் இது ஒரு நரம்பு வலியாகும்.

 

இந்த சிஆர்டிக் என்பது ஒரு நரம்பின் பெயர் ஆகும் நமது உடலில் ஏற்படும் நரம்பு வலிகளில் மிகவும் தாங்க முடியாத வலியை கொடுப்பது இந்த நரம்பு வலி ஆகும்.

 

இந்த நரம்பு நமது முதுகில் தோன்றி காலின் குதிங்கால் வரை இருக்கும். இந்த சியாட்டிக் நரம்பு வலி ஏற்படுகிறது என்பதற்கான அறிகுறிகள் என்னவென்றால் முதுகு வலி, கால் பின்புறத்தில் வலி, இடுப்பு வலி, கால் நகர்த்துவதில் சிரமம், கால் விரல்களில் வலி இவை அனைத்தும் இதற்கான முன் அறிகுறிகள் ஆகும்.

 

இதனை நீங்கள் சரி செய்வதற்கு எங்கேயும் செல்லாமல் சுலபமாக வீட்டிலிருந்தே குணப்படுத்தி விடலாம.

 

தேவையான பொருட்கள்

கல் உப்பு

வெந்தயம்

இஞ்சி எண்ணெய்

மஞ்சள் பொடி

பூண்டு

பால்

 

செய்முறை

இதனை நீங்கள் ஐந்து முறைகளின் மூலம் சரி செய்து விடலாம்.

 

முதலாவது தண்ணீரை நன்கு சூடு படுத்தி விட்டு அதில் கல் உப்பை சேர்த்துக் கொள்ளவும் பின்பு அந்த நீரை கொதிக்க விட வேண்டும்.

இந்த நீரை நீங்கள் தினமும் குளிக்க பயன்படுத்தும் நீருக்கு பதிலாக இந்த நீரை பயன்படுத்தி குளிக்கலாம். இவற்றை நீங்கள் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்து வந்தாலே சில மாதங்களில் இந்த வழியை சரி செய்து விடலாம்.

 

இரண்டாவது வெந்தயத்தை ஒரு நாள் முழுவதும் ஊற வைக்க வேண்டும். நன்கு ஊறிய வெந்தயத்தை மிக்ஸி ஜாரில் போட்டு மைய அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதனுடன் சிறிதளவு தண்ணீரை சேர்த்து எந்த பகுதிகளில் எல்லாம் வலி ஏற்படுகிறதோ அந்த இடத்தில் எல்லாம் நன்கு தேய்த்து விட வேண்டும். இவற்றை நீங்கள் வாரத்திற்கு 2 முறை தொடர்ந்து இரண்டு மாதங்கள் செய்தாலே போதும் இந்த வலி உங்களை விட்டு நீங்கிவிடும்.

 

மூன்றாவது இஞ்சி எண்ணெய் இதனை ஐந்து முதல் ஆறு துளிகள் வரை எடுத்து கால் நரம்புகளிலும் மூட்டுகளிலும் அஞ்சு முதல் பத்து நிமிடங்கள் வரை தேய்த்தால் அனைத்து நரம்பு வலிகளும் தீர்ந்துவிடும். இந்த இஞ்சி எண்ணெயின் மூலம் கை கால் வலியை சரி செய்து விடலாம்.

 

நான்காவது முதலில் எட்டு முதல் 10 பல் பூண்டுடன் ஒரு கிளாஸ் தண்ணீர் மற்றும் பால் இந்த மூன்றையும் சேர்த்து சூடுபடுத்த வேண்டும். இதனை நன்கு கொதித்த பின் இறக்கி விட வேண்டும். இந்தப் பாலை நீங்கள் தினமும் காலை மற்றும் மாலை என இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தாலே நரம்பு தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் சரியாகிவிடும்.

 

ஐந்தாவது ஒரு கிளாஸ் பாலுடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் பொடியை சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். கொதித்த இந்த பாலை சிறிது நேரம் கழித்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கை கால் வலி மூட்டு வலி இவை அனைத்தும் சரி செய்து விடலாம்.

 

இவ்வாறு வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்தேன் கால் மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட அனைத்து உடல் வலி தொந்தரவுகளையும் போக்கிவிடலாம்.

Previous articleஇந்த ஒரு பழத்தில் இவ்வளவு நன்மைகளா!! தெரிந்தால் விட மாட்டீர்கள்!!
Next articleபெண்களை தெரிந்து கொள்ளுங்கள்!! அதிகமாக வெள்ளைப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம்!!