ஒரு ரூபாய் செலவு செய்ய தேவை இல்லை! கிட்ட பார்வை தூரப்பார்வை சரி செய்ய ஈசி டிப்ஸ்!

Photo of author

By CineDesk

ஒரு ரூபாய் செலவு செய்ய தேவை இல்லை! கிட்ட பார்வை தூரப்பார்வை சரி செய்ய ஈசி டிப்ஸ்!

உடலில் ஒவ்வொரு உறுப்புகளும் முக்கியமானவை. எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற பாகுபாடு கிடையாது. அதில் ஒன்று கண்கள். கண் பார்வை வலுவாகவும் பாதிப்படையாமலும் பாதுகாப்பது மிக மிக அவசியம்.

கண் பார்வை பிரச்சனைகள், கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண் புரை என தொடங்கி பல பிரச்சனைகளை நாம் காண்கிறோம். கண்களுக்கு ஓய்வில்லாமல் அதிக பணி கொடுப்பதால் இது போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.

இதனைத் தொடர்ந்து பார்வைகுறைபாடு பிரச்சனையை எதிர்கொள்ள உதவும் சிறந்த மூலிகைகள் குறித்து தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:

*திரிபலா
*நெல்லிக்காய்
*கேரட்
*பூண்டு
*கொத்தமல்லி
*சக்கரை வல்லி கிழங்கு

பயன்படுத்தும் முறை:

1. திரிபலா பொடியை நீரில் போட்டு ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை வடிகட்டி, அந்நீரால் கண்களைக் தினமும் கழுவி வந்தால், கண் பார்வை மேம்படும்.
2. தினமும் நெல்லிக்காய் ஜூஸ் அல்லது 1 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் பொடியை நீரில் கலந்து வருகையில் கண்பார்வை பலமாகும்.
3. கிட்டப் பார்வை அல்லது தூரப் பார்வை பிரச்சனை இருக்கு என்றால் தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் அல்லது தினமும் ஒரு கேரட்டை உட்கொண்டு வந்தால் அதில் உள்ள வைட்டமின் ஏ ஊட்டச்சத்து கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
4. தினமும் ஒரு பூண்டு அல்லது சமைக்கும் உணவில் பூண்டை சேர்த்து வந்தால் அதில் உள்ள உட்பொருட்கள் பலவீனமான கண் பார்வை பிரச்சனைகள் அண்டாமல் தடுக்கும்.
5. சீரகம் மற்றும் கொத்தமல்லி விதை சம அளவு எடுத்து நன்றாக இடித்து பொடியாக்கி சலித்து கொண்டு காலை, மாலை இந்த பொடியை நாட்டு சர்க்கரை சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து குடித்து வந்தால் கண் பார்வை தெளிவாகும்.
6. ச‌ர்‌க்கரை வ‌ள்‌ளி‌க் ‌கிழ‌ங்கை அ‌வி‌த்தோ அ‌ல்லது உண‌வி‌ல் சமை‌த்தோ சா‌ப்‌பி‌ட்டு வந்தால் அதில் உ‌ள்ள வைட்டமின் ஏ கண் பார்வையில் ஏற்படுகின்ற பிரச்சனைகளை தடுக்கிறது.

இதனை அனைத்தையும் பயன்படுத்தி வருகையில் கண் பார்வை முற்றிலும் குணமாகும்.