உங்கள் வீட்டு பூஜை அறையில் இதை செய்தால் நீங்கள் செல்வந்தர்கள் ஆவதை யாராலும் தடுக்க முடியாது!

Photo of author

By Divya

உங்கள் வீட்டு பூஜை அறையில் இதை செய்தால் நீங்கள் செல்வந்தர்கள் ஆவதை யாராலும் தடுக்க முடியாது!

வீட்டு பூஜை அறையை நாம் பராமரிக்கும் விதத்தில் தான் முன்னேற்றம் ஏற்படும். வாரம் ஒருமுறை பூஜை அறையை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். வாசனை மிகுந்த மலர்களால் கடவுள் படங்களை அலங்கரிக்க வேண்டும்.

அதுமட்டும் இன்றி சந்தனம், பன்னீர் போன்ற வாசனை திரவத்தை பூஜை அறையில் தெளிக்க வேண்டும். லட்சுமி. குபேரருக்கு உகந்த பொருட்களை வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபட்டு வந்தால் செல்வ செழிப்பு ஏற்படும்.

துவரம் பருப்பு, அரிசியை வீட்டு பூஜை அறையில் ஒரு கிண்ணத்தில் கொட்டி வைத்து வழிபட்டு வந்தால் அன்னத்திற்கு பஞ்சம் ஏற்படாது.

பூஜை அறையில் கல் உப்பை நிரப்பி வைத்தால் கோடி நன்மைகள் உண்டாகும். அதேபோல் ஒரு செம்பில் பன்னீர் நிரப்பி மஞ்சள் தூள் மற்றும் பச்சை கற்பூரத்தை போட்டு சாமி படத்திற்கு முன் வைத்து தங்களது தேவைகளை கூறவும். பிறகு அந்த பன்னீரை வீடு முழுக்க தெளிக்கவும். இவ்வாறு செய்வதினால் நினைத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். கடன் தீர்ந்து பண வரவு அதிகரிக்கும்.