சனாதனம் குறித்து இனி யாரும் பேசக்கூடாது ஸ்டாலின் போட்ட புது உத்தரவு!!
திமுக கட்சியில் உள்ள அமைச்சர்களும், மூத்த நிர்வாகிகளும், தொண்டர்களும் யாரும் சனாதனம் குறித்து பேசக்கூடாது என அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் சனாதனம் ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக தமிழக அமைச்சர்களான உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சனாதனம் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்புகள் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு எதிராக தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அவரது உருவப் படத்தை தீட்டி எரித்தும் கலவரத்தில் ஈடுபடுகின்றனர். மேலும் வட மாநிலத்தை சேர்ந்து சாமியார் ஒருவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தலைப்பு ஒரு கோடி ரூபாய் விலை நிர்ணயித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியது. தற்போது ஔ தமிழக முழுவதும் சனாதன குறித்து பல்வேறு கருத்துக்கள் என் நிலவில் வருகிறது.
இந்நிலையில் திமுக கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் கட்சி தொண்டர்களுக்கு ஒரு புது உத்தரவை பிறப்பித்துள்ளார். அதாவது கட்சியில் உள்ள நிர்வாகிகளோ, மூத்த நிர்வாகிகளோ, அமைச்சர்களோ, சட்டமன்ற உறுப்பினர்களோ, நாடாளுமன்ற உறுப்பினர்களோ யாராக இருந்தாலும் சனாதனம் குறித்த கருத்துக்களை வெளியிட வேண்டாம் என்று உத்தரவிட்டு உள்ளார். மேலும் சனாதனம் குறித்து தொலைக்காட்சி விவாதங்களிலோ அல்லது செய்தியாளர்களின் சந்திப்பிலோ எதுவும் பேச வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சனாதனம் ஆதரவு என்று கூறப்படும் பாஜகவினர் கூட செய்யும் முற்படாத செயலை திமுக செய்துள்ளது என்று பொதுமக்கள் கருதுகின்றனர். திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் இந்த உத்தரவு பாஜகவுக்கு பயந்து அடிபணிந்து விட்டதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.