இவரை யாரும் சரியாகப் புரிந்து கொள்வதே இல்லை! – நடிகர் ஸ்ரீகாந்த்

Photo of author

By Parthipan K

இவரை யாரும் சரியாகப் புரிந்து கொள்வதே இல்லை! – நடிகர் ஸ்ரீகாந்த்

நடிகர் ஸ்ரீகாந்த் தற்போது நடித்துள்ள படம் ‘தி பெட்’. இந்த படத்தை இயக்குனர் மணிபாரதி இயக்கி உள்ளார். இந்த படத்தில் நாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார். ஸ்ரீநிதி ப்ரோடக்சன்ஸ் மற்றும் ஆஞ்சநேயா ப்ரோடக்சன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

இந்த படத்தின் விழாவில் நடிகர் ஸ்ரீகாந்த் பேசுகையில், இந்த படத்தின் டைட்டிலை கேட்கும்போது, சற்று தயக்கமாக இருந்தது. அதுபோல், கதையும் ஏதாவது சர்ச்சையை கிளப்புமோ என்கிற பயமும் இருந்தது. சிலர் சொல்லும்போது ஒன்றாகவும், செயலில் வேறு ஒன்றாகவும் செய்வார்கள்.

எனவே, படத்தில் நான் நடிக்க ஒப்புக்கொண்டுவிட்டால் அதன்பின், அதிலிருந்து பின்வாங்க முடியாது. அப்படி செய்தால் அது தவறாகிவிடும். வேறு சிலருடன் ஒப்பிட்டு பேச ஆரம்பித்து விடுவார்கள் என கூறிய அவர், எல்லோருக்கும் சிம்பு மாதிரி தைரியம் இருக்காது எனக் கூறி ‘ஹேட்ஸ் ஆப் சிம்பு’ என தெரிவித்துள்ளார்.

ஏனெனில், பல பேர் சிம்புவை சரியாகப் புரிந்து கொள்ளவே மாட்டார்கள். எனவே, யாரும் சரியாகப் புரிந்துகொள்ளப்படாத நடிகர் சிம்பு என்றே நான் நினைக்கிறேன் என தெரிவித்துள்ள ஸ்ரீகாந்த், அவர் ஒரு அற்புதமான மனிதர். படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட பிறகு, முழுவதுமாக தன்னை இயக்குனரிடம் ஒப்படைத்து விடுவார்.

வேறு சிலர் மாதிரி கதையை குழப்பினாலும், அவர் கண்டுகொள்ள மாட்டார். படங்களில் நடிக்கும்போது சில சமயங்களில் நம் யோசனையை சொல்வோம். அது பார்வையாளரின் கண்ணோட்டத்திலும் இருக்கும். அதனால், நடிகர்கள் சொல்லும் யோசனைகளை ஏற்றுக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை என தெரிவித்துள்ளார்.