Home News பள்ளிகள் திறப்பதில் சிக்கலா! அமைச்சருடன் முதல்வர் ஆலோசனை!

பள்ளிகள் திறப்பதில் சிக்கலா! அமைச்சருடன் முதல்வர் ஆலோசனை!

0
பள்ளிகள் திறப்பதில் சிக்கலா! அமைச்சருடன் முதல்வர் ஆலோசனை!
One day school the next day holiday! This is the next update of the Department of Education!

பள்ளிகள் திறப்பதில் சிக்கலா! அமைச்சருடன் முதல்வர் ஆலோசனை!

கொரோனா தொற்றானது கடந்து ஓராண்டு காலம் ஆகியும் இன்றளவும் அதன் தாக்கம் குறியாமல் உள்ளது.முதல்,இரண்டாம் என ஆரம்பித்து முடிவில்லாமல் மூன்றாம் அலையை நோக்கி தொடர்ந்து செல்கிறது.கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டும் அத்தொற்று பரவலை முழுவதுமாக சரி செய்ய முடியாது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.மேலும் அந்த தொற்று நமக்கு பரவாமல் இருக்க அந்த தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஏனென்றால் அத்தடுப்பூசியானது நமது உடலில் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் என  மருத்துவர்கள் கூறியுள்ளனர்.தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலையானது கட்டுக்கடங்காமல் பரவி வந்தது.அதனால் மக்கள் நலன் கருதி முழு ஊரடங்கு அமல்படுத்தினர்.முழு ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டால்  மாணவர்களுக்கும் தொற்று பரவும் ஆபாயம் ஏற்படும்.அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் தற்காலிகமாக மூடப்பட்டது.

அவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.தற்போது இரண்டாம் அலை தொடங்குவதற்கு முன்  பள்ளிகள் திறக்கப்பட்டது.மீண்டும் தொற்று பாதிப்பு அதிகமானதால் மீண்டும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது.தற்போது மூன்றாம் அலை தொடங்க உள்ளதாக ஆராய்ச்சியில் மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.இந்நிலையில் செப்டம்பர் 1-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறப்பதாக தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

தற்போது மூன்றாவது அலை அதிகரித்து வருவதால் பள்ளிகள் திறந்தால் எந்தவித நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும் என்பதை பற்றியெல்லம் முதல்வர்,பள்ளி கல்வித்துறை அமைச்சருடன் ஆலோசனை நடத்த உள்ளார்.இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளிப்போடவும் வாய்ப்புகள் உள்ளதாக கூறியுள்ளனர்.இந்த ஆலோசனை கூட்டத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார்.இந்த ஆலோசனை கூட்டத்தின் இறுதியானது ஸ்டாலின் கூறும் முடிவு பொறுத்தே பள்ளிகள் திறக்கப்படும்.