ஈரோடு மாவட்டத்தில் வட மாநில தொழிலாளி பலி! போலீசார் தீவிர விசாரணை!

ஈரோடு மாவட்டத்தில் வட மாநில தொழிலாளி பலி! போலீசார் தீவிர விசாரணை!

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள புத்தூர் புதுப்பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஒரு கட்டிடத்தில் இருந்து வடமாநில தொழிலாளி தவறி விழுந்து பலியான சம்பவம் நடந்தது. இந்த சம்பவம் தொடர்பாக  போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில்  சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

மேலும் அந்த விசாரணையில் தவறி விழுந்து பலியான வாலிபரின் பெயர் சோட்டு புனியா(30) என்பது தெரியவந்தது. மேலும் அவர் மாடியில் நின்று கொண்டிருந்ததாகவும் நிலை தடுமாறி கீழே விழுந்ததாகவும் கூறப்படுகிறது. அவர் கீழே விழுந்ததில் தலை மற்றும் உடலில் பலத்த அடிபட்ட நிலையில் அக்கம் பக்கத்தினர்  அவரை மீட்டு ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு  அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment