காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தாலும் வெள்ள அபாயம் இல்லை! நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் பேட்டி!

0
117

காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தாலும் வெள்ள அபாயம் இல்லை! நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் பேட்டி!

கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் மலையின் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து 2.10 லட்சம் கன அடி நீர் திறக்கப்படும் நிலையில், திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1.40 லட்சம் கன அடியாக உள்ளது.

இந்நிலையில் நகர்ப்புற நிர்வாகத் துறை அமைச்சர் கே . என். நேரு,முக்கொம்பு மேலணையில் ஆய்வு மேற்கொண்டார்.

நீர்வரத்து மற்றும் திறக்கப்படும் நீரின் அளவு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கரையோரப் பகுதிகளை முழுமையாக கண்காணிக்க வேண்டும் என தொடர்ந்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்..

அதன் பிறகு செய்தியாளர்களுக்குபேட்டி அளித்த அமைச்சர் :

 

மேட்டூரில் இருந்து நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துவருகிறது.

60 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி ஆற்றில் கூடுதலாக வெள்ளம் வருகிறது.

நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தாலும் வெள்ள அபாயம் இல்லை. ஆனாலும் முன்னெச்சரிக்கையாக வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை ,

தீயணைப்பு துறை, காவல் துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.

அவரைத் தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த நீர்வள துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி பேசுகையில் :

மேட்டூரில் இருந்து தற்போது

வினாடிக்கு 2.10 லட்சம் கன அடி நீர் திறக்கப்படுகிறது.வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இல்லை ஆனாலும் முன்னெச்சரிக்கை நிறைவுக்கான மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், பொதுப்பணித்துறை வருவாய்த்துறை,

என பல்வேறு துறைகளும் தயார் நிலை வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.