அண்ணாமலையிடம் 500 கோடி கேட்டு திமுக சார்பில் நோட்டிஸ்!

Photo of author

By Rupa

அண்ணாமலையிடம் 500 கோடி கேட்டு திமுக சார்பில் நோட்டிஸ்!

கடந்த இரண்டு நாட்களாக சமுக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பெரும் விவாத பொருளாக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட திமுக முக்கிய புள்ளிகளின் சொத்து பட்டியல் விவகாரம் உள்ளது.

அண்ணாமலை வெளியிட்ட திமுக சொத்து பட்டியலில் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை இது முதல் கட்டமாக வெளியிடப்பட்ட பட்டியல், இரண்டாம் கட்ட பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றும் மொத்தம் நான்கு கட்டமாக வெளியிட போவதாகவும், தமிழகத்தில் ஆட்சியில் இருந்த கட்சிகளை அணைவரின் சொத்து பட்டியலையும் வெளியிட போவதாக கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அண்ணாமலையின் இந்த அறிக்கை குறித்து அதிமுக முன்னணி தலைவர்கள் நிர்வாகிகள் தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்தனர். இதனிடையே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது அண்ணாமைலயை பற்றி என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம், அரசியலில் 50 வருட அனுபவம் பெற்றவன் நான் அவர் அரசியல் முதிர்ச்சி இல்லாதவர், அரசியலில் முதிர்ச்சி பெற்றவர்களை பற்றி கேள்வி கேட்டால் அதற்கு பதில் சொல்ல தயார் என கூறியிருந்தார்.

 

இந்த நிலையில் திமுக செய்தி தொடர்பாளர் ஆர் எஸ் பாரதி அண்ணாமலைக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளார். அதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட திமுக சொத்து பட்டியல் முற்றிலும் அரசியல் உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டது என்றும், அதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை இது குறித்து உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும், இணையதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ காட்சிகளை நீக்க வேண்டும், 48 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் சிவில் அல்லது கிரிமினல் வழக்கு தொடரப்படும், மேலும் இழப்பீடு தொகையாக 500 கோடி தர வேண்டும் என தான் அனுப்பியுள்ள நோட்டிஸில் ஆர் எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.