happy street நிகழ்ச்சியில் வயது வித்தியாசமின்றி பாலின வேறுபாடின்றி கூட்டமாக vibe செய்த பொதுமக்கள்!

0
167
#image_title

சென்னை, பெரம்பூர் பகுதியில் நடைப்பெற்று வரும் happy street நிகழ்ச்சியில் வயது வித்தியாசம் பாலின வேறுபாடின்றி கூட்டமாக vibe செய்த பொதுமக்கள்.

சென்னை மாநகரத்தின் சமீபத்திய டிரெண்டாக ‘Happy street’ நிகழ்ச்சிகள் உருவாகி உள்ளன. சென்னையின் முக்கிய பகுதிகள் மற்றும் போக்குவரத்து மற்றும் ஞாயிறு விடுமுறையை கொண்டாடும் வகையிலும் இந்த happy street நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் தொடர்ந்து இந்நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

கடந்த சில மாதங்களாக அண்ணா நகர், பெசன்ட் நகர், தியாகராய நகர் ஆகிய பரபரப்பான பகுதிகளில் நடைப்பெற்றதை தொடர்ந்து சென்னை, பெரம்பூர் பகுதியில் ஹாப்பி ஸ்டீரிட் (happy Street) நிகழ்ச்சி கடந்த 3 வாரங்களாக நடைப்பெற்று வருகிறது.

இதன் தொடர்ச்சியாக சென்னை, பெரம்பூர் சிவ இளங்கோ சாலைப் பகுதியில் இன்று காலை 6 மணியாளவில் தொடர்ந்து 4வது வாரமாக ஹாப்பி ஸ்டீரிட் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், சிறுவர்கள் முதல் முதியோர்கள் வரை வயது வித்தியாசமின்றி ஏராளமானோர் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

குறிப்பாக, அங்கு ஸ்பீக்கர்களில் டி.ஜே.க்கள் ஒலித்த பாடல்களுக்கு வயது வித்தியாசமின்றி, பாலின பேதமின்றி அனைவரும் உற்சாகத்துடன் நடனமாடி மகிழ்ந்தனர்.

மேலும், இந்த ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் நடனம் மட்டுமன்றி குத்துச் சண்டை, கராத்தே, உடற்பயிற்சிகளும் நடத்தப்பட்டதோடு அதில், ஏராளமாம சிறுவர் சிறுமியர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்றனர்.