இனி ஒரே நம்பரை 4 பேர் பயன்படுத்தலாம்!! வாட்ஸ் அப் செயலியின் அதிரடியான புதிய அறிவிப்பு!!

0
142
#image_title

இனி ஒரே நம்பரை 4 பேர் பயன்படுத்தலாம்!! வாட்ஸ் அப் செயலியின் அதிரடியான புதிய அறிவிப்பு!!

ஒரே நம்பரை கொண்டு 4 செல்போன்களில் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்தும் வசதியை வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

 

2009-ம் ஆண்டு பிரையன் ஆக்டன் மற்றும் ஜேன் கோம் ஆகியோர் வாட்ஸ் அப் என்னும் செயலியை உருவாக்கினர். ஆரம்பத்தில் சொற்ப நபர்களே, பணியாளர்களாக வாட்ஸ் அப்பில் இணைந்தனர்.

 

2009 ஆம் ஆண்டு செல்போனில் நாம் பிறருக்கு அனுப்பும் குறுஞ்செய்தி சேவைக்கு நிறைய கட்டுப்பாடுகள் இருந்தன. இன்னொருத்தருக்கு குறுஞ்செய்தி அனுப்பும் சேவைக்கு கட்டணமும் அதிகம். அதனால் நிறைய பேர் வாட்ஸ் அப் சேவைக்கு மாறினர். இந்தியாவில் 2011, 2012ஆம் ஆண்டுகளுக்கு பிறகு நிறைய பேர் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்த தொடங்கினர். சிறிது, சிறிதாக வளர்ச்சியடைந்த வாட்ஸ் அப் செயலி இன்று மில்லியன், ட்ரில்லியன் பயனர்களை கொண்டுள்ளது.

 

ஆரம்பத்தில் குறுஞ்செய்தி அனுப்புவதற்கு மட்டும் பயன்படுத்தப்பட்ட வாட்ஸ் அப் செயலி, தன்பிறகு படங்கள் மற்றும் வீடியோக்களை பிறருக்கு பகிரும் வசதியும் கொண்டுவரப்பட்டது. அதனை தொடர்ந்து பல்வேறு வசதிகளையும் வாட்ஸ் அப் நிறுவனம் தங்கள் பயனாளிகளுக்கு வழங்கியது. மேலும் ஸ்டேட்டஸ் வைக்கும் வசதியும் வாட்ஸ் அப்பில் கடந்த 2016-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அதேபோல் ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் அனைவரும் வாட்ஸ் அப் செயலியை நிச்சயம் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருவார்கள். தற்போது வாட்ஸ் அப் செயலியும் அவசியமான ஒன்றாகிவிட்டது.

 

வாட்ஸ் அப் சர்ச்சைகள்:.

 

வாட்ஸ் அப் செயலி மூலம் நாம் பிறருக்கு அனுப்பப்படும் குறுஞ்செய்திகள் படங்கள் வீடியோக்கள் திருடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. உலக அளவில் வாட்ஸ் அப் ஒரு தகவல் திருட்டு தளமாக மாறி உள்ளதாவும் விமர்சிக்கப்பட்டது. சிலர் வாட்ஸ் அப் செயலியில் உள்ள தகவல்களை திருடி இருப்பதாகவும் கூறப்பட்டது.

 

வாட்ஸ் நிறுவனத்தை பேஸ்புக்கில் நிறுவனம் மொத்தமாக வாங்கிவிட்டது. தற்போது வாட்ஸ் அப் நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனம் தான் நிர்வகித்து வருகிறது. அவ்வபோது வாட்ஸ் அப் செயலியை அப்டேட் செய்து வரும் பேஸ்புக் நிறுவனம் தற்போது புதிய அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.

 

ஒரே நம்பரை கொண்டு 4 செல்போன்களில் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்தும் வசதியை வாட்ஸ் ஆப் நிறுவனம் கொண்டு வந்துள்ளது.

 

இது பயனாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது. இந்த வசதியை பெற நாம் வாட்ஸ் அப் செயலியை அப்டேட் செய்ய வேண்டும், பிறகு இந்த வசதியை பெறலாம் என வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

குறைபாடுகள்:-

 

ஒரே நம்பரை நான்கு பேர் பயன்படுத்தும் வசதியால் நமக்குத் தெரியாமல் பிறரும் அதே எண்ணை தவறாக பயன்படுத்தக் கூடும் என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது. நம் வாட்ஸ் அப் எண்ணை தெரியாமல் பிறர் பயன்படுத்தி சட்டவிரோதமான செயல்களிலும் ஈடுபடலாம் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இன்னும் பல குற்றச்சாட்டுகள் குறித்தும், குறைபாடுகள் குறித்தும் வாட்ஸ் அப் நிறுவனம் தனது தலைமை நிர்வாகக் குழுவுடன் ஆலோசித்து வருகிறது.