இனி தேர்வு மற்றும் முடிவுகள் அனைத்தும் ஒரே நாளில்!! கல்லூரி மாணவர்களுக்கு வெளிவந்த நியூ அப்டேட்!!

Photo of author

By Rupa

இனி தேர்வு மற்றும் முடிவுகள் அனைத்தும் ஒரே நாளில்!! கல்லூரி மாணவர்களுக்கு வெளிவந்த நியூ அப்டேட்!!

Rupa

Now exam and result all in one day!! New update for college students!!

இனி தேர்வு மற்றும் முடிவுகள் அனைத்தும் ஒரே நாளில்!! கல்லூரி மாணவர்களுக்கு வெளிவந்த நியூ அப்டேட்!!

மாநில கல்விக் கொள்கையின் ஆலோசனை கூட்டம் ஆனது இன்று பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் மற்றும் இதர கல்லூரி முதல்வர்களுடன் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்றார்.பின்பு அங்கிருந்த செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அதில் மாணவர்களுக்கு ஒரு புதிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டார்.

தற்பொழுது வரை ஒவ்வொரு பல்கலைக்கழகங்களிலும் ஒவ்வொரு தேதிகளில் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல அதன் முடிவுகளும் வெவ்வேறு நாட்களில் வெளியிடப்படுகிறது. இதனால் பாதி கல்லூரிகளில் முன்னதாகவே முதுகலை படிப்பிற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு விடுகிறது. இதனால் முதுகலையில் சேர மாணவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

இதனை தடுக்கும் விதத்தில் எப்படி பள்ளிகளில் பொது தேர்வுகள் ஒரே தேதியில் நடத்தப்படுகிறதோ அதேபோல பல்கலைக்கழகங்களிலும் ஒரே தேதியில் தேர்வு நடத்தப்பட்டு ஒரே தேதியில் முடிவுகளும் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். இந்த நடைமுறையானது அடுத்த ஆண்டு முதல் கட்டாயம் அமழுக்கு வரும் என்று கூறினார்.

இவ்வாறு செய்வதால் முதுகலை சேர விரும்புவோர் ஒரே நேரத்தில் விண்ணப்பிக்க முடியும்.அதேபோல தற்காலிகமாக பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் சீட் கிடைத்து விட்டால் அங்கு செல்ல விருப்பப்படுவர்.

அவ்வாறு செல்லும் மாணவர்களிடம் தாங்கள் பெற்ற கட்டணத்தை திருப்பி தராமலும் மேற்கொண்டு சான்றிதழ்கள் வழங்கப்படாமல் இழுத்தடிப்பதாக பல்கலைக்கழகங்கள் மீது பல புகார்கள் இருந்து வருகிறது. இவ்வாறு அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் செய்யக்கூடாது என்று கூறி அறிவுறுத்தினார். மாணவர்கள் எங்கு படிக்க விருப்பப்படுகிறார்களோ அங்கு சென்று படிக்க வழி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.