இனி IPL, FOOTBALL மேட்ச் திரையரங்கில் பார்க்கலாம்!! OTT ரிலீஸ் எதிரொலி!!
ஆண்டுக்கு ஒரு படம் என நடிக்கும் பெரிய நடிகர்கள் ரஜினி,அஜித்,விஜய்,கமல் போன்றோர் இரு படங்களில் நடிக்க வேண்டும் என தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இன்று திரையரங்க உரிமையாளர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. இது கலந்து கொண்ட திரையரங்கு உரிமையாளர்கள், சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் கூறியதாவது தற்போது திரையரங்கில் வந்து படம் பார்ப்போரின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் அதனால் பல கோடி நஷ்டம் ஏற்படுவதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளனர். எனவே முன்னணி நடிகர்கள் ஆண்டுக்கு இரண்டு படங்களாவது நடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர் திரையரங்குகளில் படங்கள் வெளியாகி 8 வாரங்களுக்குப் பிறகு தான் OTT- யில் வெளியிட வேண்டும் போன்ற தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
திரையரங்கில் படம் வெளியாகி நான்கு வாரத்திற்கு உள்ளேயே OTT – யில் வெளியாவதால் படம் பார்க்க வருவோரின் கூட்டம் குறைகிறது.இது தொடர்பான விளம்பரங்கள் படம் வெளியாகி நான்கு வாரம் கழித்துதான் வெளியிட வேண்டும் என திரைப்பட தயாரிப்பாளர்களிடம் பேசி உள்ளதாகவும், திரையரங்குகளில் திரைப்படம் மட்டுமே வெளியிட வேண்டும் என்பதை மாற்றி வேறு சில நிகழ்ச்சிகள் நடத்தினாலும் தங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என தீர்மானித்துள்ளனர்.
குறிப்பாக ஐபிஎல் ஆட்டங்கள்,உலக கோப்பை கிரிக்கெட்,கால்பந்து,உலக அழகி போட்டி ஆகியவற்றை திரையரங்கில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளதாகவும் பாதுகாப்பினை அவர்கள் பார்த்துக் கொள்வதாகவும் கூறியுள்ளனர். திரையரங்கு உரிமையாளர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்வதற்கு இப்புதிய திட்டத்தினை வகுத்துள்ளனர். இத்திட்டம் நல்ல வரவேற்பு பெரும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.