GOLD வாங்க இது தான் சரியான நேரம்!! நகைப்பிரியர்களே தங்கம் விலை இன்று இறங்கு முகத்தில் உள்ளது!!
தங்கம் என்றால் யாருக்கு தான் ஆசை இருக்காது.உலகளவில் இந்தியர்கள் தான் தங்கத்தை அதிகளவு விரும்பி அணிகின்றனர்.சுப நிகழ்வுகளில் தங்கம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
தங்கம் ஒரு சிறந்த முதலீடாக இருப்பதினால் தான் ஏழை,பணக்காரர் மத்தியில் அதற்கு தனி மவுசு இருந்து வருகிறது.
இந்த தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.கடந்த பிப்ரவரி மாதத்தில் ரூ.6 ஆயிரத்திற்குள் இருந்த தங்கம் விலை இந்த மாதத்தில் பல மடங்கு ஏற்றத்தை கண்டுள்ளது.
நேற்று தங்கம் விலை அதிகரித்து விற்பனையான நிலையில் இன்று அதன் விலை சற்று குறைந்து இருக்கிறது.
நேற்று 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.6,235க்கும் ஒரு சவரன் ரூ.49,880க்கும் விற்பனையானது.இந்நிலையில் இன்று அதன் விலை சற்று குறைந்து இருக்கிறது.
அதன்படி,சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.280 குறைந்து,ரூ.49,600க்கும்,ஒரு கிராம் ரூ.35 குறைந்து ரூ.6,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.அதேபோல் 24 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.304 குறைந்து ரூ.54,112க்கும் விற்பனையாகின்றது.
மேலும் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ.79.50க்கும்,ஒரு கிலோ ரூ.79,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.