“இனி கொலை குத்துதான்.. அதிரடி அரசியல் உறியடித்தால் பதவி” : சர்ச்சை நாயகன் மன்சூர் அலிகான்!!
டெல்லியில் தனது அரசியல் கட்சி பெயரை பதிவு செய்துள்ள மன்சூர் அலிகான் ஒரு முடிவுடன் அரசியலில் இறங்கி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
நடிகரும் அரசியல்வாதியும் தமிழ் தேசிய புலிகள் கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகான் குடியரசு தினத்தையொட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றி தனது தேசிய அரசியல் பயணத்தை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து தனது கட்சியின் பெயரை இந்திய ஜனநாயக புலிகள் கட்சி என மாற்றுவதாக அறிவித்தார்.
அதன்படி டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் தனது கட்சியின் பெயரை இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி என பதிவு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒரு முடிவுடன் அரசியலில் இறங்கியுள்ளேன். பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் சேர்ந்துள்ளனர். தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்படுகிறது. புயலின் போது மீனவர்களுக்கு யாரும் உதவவில்லை. அதிரடி அரசியல், உறியடித்தால் பதவி.
கட்சிக்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பல்லாவரத்தில் முதல் மாநாடு நடைபெறும். நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் எனக்கு ஈடுபாடு இல்லை. நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பாகவே அரசியல் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளேன். தொடர்ந்து காவிரி போராட்டம், இலங்கை தமிழருக்கான போராட்டம், ஆளுநர் மாளிகைக்கு எதிரான கிரிக்கெட் விளையாடும் போராட்டம் போன்றவற்றை நடத்தியுள்ளேன்.” எனத் தெரிவித்தார்
மேலும் விஜயின் அரசியல் கட்சி குறித்து எழுப்பிய கேள்விக்கு, ” முதலில் கல்யாணம் நடக்கட்டும்.. அப்புறம் முதலிரவு பற்றி பேசலாம்..” என பதில் அளித்துள்ளார்.