இனி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்!! அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை!!
இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள்.மேலும் பல்வேறு பகுதியில் இருந்து வருபவர்களுக்கு இந்த ரயில் பயணம் மிகவும் சவுகரியமாக அமைகின்றது.
இதனால் ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை எடுத்து வருகின்றது. பொதுமக்கள் பெரிதும் ரயில்களை பயன்படுத்தி வருகின்றன்னர்.
இவ்வாறு சாமானிய மக்கள் அதிக அளவில் ரயில் பயணம் செய்து வருகின்றனர்.அந்த வகையில் கேராளவில் ரயில் சேவையை செப்டம்பர் மாதம் வரை நீடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.
தற்பொழுது கேரளா மாநிலத்தில் ரயில் பயணம் செய்வோர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனால் எர்ணாகுளம் மற்றும் வேளாங்கண்ணி என்ற பகுதிகளுக்கு இடையே சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.
எனவே பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ரயில்வே துறை சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது.அந்த வகையில் எர்ணாகுளம் மற்றும் வேளங்கண்ணி இடையே சிறப்பு ரயில்கள் செப்டம்பர் மாதம் வரை இயக்கப்படும் என்று அந்த மாநில ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
இந்த சிறப்பு ரயில்கள் வார இறுதி நாட்களான சனிகிழமை மற்றும் ஞாயிறு கிழமைகளில் இயக்கப்பட உள்ளது.அந்த வகையில் சனிகிழமை எர்ணாகுளம் மற்றும் வேளாங்கண்ணி பகுதிகளுக்கு இடையே மதியம் 1.10 மணியளவில் இயக்கப்பட உள்ளது என்றும் அதன் பிறகு ஞாயிற்று கிழமை மாலை 6.40 மணிக்கு இயக்கப்பட உள்ளது என்றும் ரயிவே துறை தெரிவித்து உள்ளது.