இனி நீங்களும் சூப் செய்யலாம்!
முள்ளங்கியில் பல வகைகள் உண்டு.அவை மஞ்சள் முள்ளங்கி, சிவப்பு முள்ளங்கி, வெள்ளை முள்ளங்கி என்பனவாகும்.மஞ்சள் முள்ளங்கியைத்தான் கேரட் என்ற பெயரால் குறிப்பிடுகிறோம்.மற்ற சிவப்பு ,வெள்ளை முள்ளங்கிகள் ஒரே தன்மை வாய்ந்தவை.எனினும் முள்ளங்கியை நீரழிவு நோய்களுக்குப் பல வகையில் மருந்தாக உபயோகிக்கிறார்கள். பொதுவாக இது சிறுநீரக கோளாறுகளை அகற்றுகிறது. சிறுநீரகக் கோளாறுகளை பக்குவம் செய்து தொடர்ந்து உட்கொண்டு வந்தால் எல்லா வகையான மூல நோய்களும் குணமாகும்.
தேவையான பொருட்கள்:. சிவப்பு முள்ளங்கி- 2.
காரட்- 1. பார்லி அரிசி – 100 கிராம். பால் – 100 மில்லி லிட்டர். பச்சைப் பட்டாணி- சிறிதளவு. காலிஃப்ளவர் – சிறிதளவு. மிளகு தூள். உப்பு – தேவைக்கேற்ப. பார்லியுடன் அறை லிட்டர் அளவு தண்ணீர் சேர்த்து முக்கால் மணி நேரம் வேக வைக்க வேண்டும். காய்களை நறுக்கி வெந்த பார்லியுடன் மீண்டும் நன்றாக வேகவிட வேண்டும்.அத்துடன் சிறிது பால் சேர்த்து மிளகுத்தூள், உப்பு ஆகியவற்றை கலக்கவும்.நன்றாக கொதித்தவுடன் இறக்கி விடவும்.இப்போது சூடான முள்ளங்கி சூப் தயார்.முள்ளங்கியை விரும்பாதவர்கள் கூட விரும்பி உண்பார்கள்.