இனி இலங்கை டு இந்தியா கப்பல் பயணம் செய்யலாம்!!! நாகப்பட்டினம் துறைமுகத்தை அழகுபடுத்த உத்தரவு!!!
இலங்கை முதல் இந்தியா வரை கப்பல் போக்குவரத்துக்கான ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் போக்குவரத்து தொடங்குவதற்கு முன்னர் நாகப்பட்டினம் மாவட்டத்தின் துறைமுகத்தை அழகுபடுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியா நாட்டை சேர்ந்த தமிழகத்தில் உள்ள நாகப்பட்டினம் மாவட்டம் துறைமுகம் முதல் இலங்கை நாட்டின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் காங்கேசன் துறைமுகம் வரை படகு போக்குவரத்து தொடங்குவதற்கு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கு சுங்கத்துறை, குடிமைத்துறை, இந்திய வெளியுறவுத்துறை இந்திய கப்பல் போக்குவரத்து கழகம் உள்ளிட்டவை மூலமாக பல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.
இதையடுத்து உள்நாட்டு போரில் கடுமையாக சேதம் அடைந்த காங்கேசன் துறைமுகத்தை சீரமைக்க மத்திய அரசு 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள துறைமுகத்தை அழகுபடுத்த உத்தரவு பிறப்பித்து அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் நாகப்பட்டினம் துறைமுகத்தை தமிழக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் வேலு அவர்கள் நேற்று(செப்டம்பர்20) நேரில் சென்று ஆய்வு செய்தார். ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட அமைச்சர் வேலு அவர்கள் நாகப்பட்டினம் துறைமுகத்தில் நயம் மிக்க ஓவியங்களை வரைவதற்கும் அங்கு இருக்கும் கட்டடங்களை அழகுபடுத்தவும் உத்தரவு பிறப்பித்தார்.
அது மட்டுமில்லாமல் நாகப்பட்டினம் துறைமுகத்தை அழகுபடுத்த தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்தார். இன்னும் சில தினங்களில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள துறைமுகத்தை அழகுபடுத்தும் பணி துவங்கவுள்ளது.