ஆசியா விளையாட்டு போட்டிகள் 2023!!! வங்கதேசத்துடன் மோதும் இந்தியா கால்பந்து அணி!!! 

0
68
#image_title

ஆசியா விளையாட்டு போட்டிகள் 2023!!! வங்கதேசத்துடன் மோதும் இந்தியா கால்பந்து அணி!!!

தற்பொழுது நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் கால்பந்து போட்டியில் இன்று(செப்டம்பர்21) மாலை நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் விளையாடவுள்ளது.

ஆசிய விளையாட்டு போட்டிகள் 1951ம் வருடம் முதல் நடைபெற்று வருகின்றது. ஆசிய விளையாட்டு கூட்டமைப்பு தொடங்கிய பின்னர் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெறாத தொடங்கியது. ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறையும் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் ஆசிய விளையாட்டு போட்டிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஒலிம்பிக் போட்டிகளுக்கு அடுத்தபடியாக ஆசிய விளையாட்டு போட்டிகள் பார்க்கப்படுகின்றது.

தற்பொழுது வரை நடந்து முடிந்துள்ள ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய 672 பதக்கங்களை வென்று குவித்துள்ளது. மேலும் மொத்தமாக பதக்கங்கள் வென்றவர்களின் பட்டியலில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது.

நடப்பாண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனா நாட்டின் ஹாங்சோவ் நகரில் வருகிற 23ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் துவக்க விழா நடைபெறுவதற்கு முன்னரே கிரிக்கெட், வாலிபால், கால்பந்து பான்ற சில போட்டிகள் ஆரம்பமாகி விட்டது.

ஆசிய விளையாட்டு போட்டிகளில் கால்பந்து விளையாட்டில் ஆண்கள் பிரிவில் 21 அணிகள் பங்கேற்றுள்ளது. இந்த 21 அணிகளும் 6 குழுக்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. இந்தியா கால்பந்து அணி ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. மேலும் கால்பந்து போட்டியில் லீக் சுற்றுக்கள் நடைபெற்று வருகின்றது.

இந்திய அணி தனது முதல் லீக் சுற்றில் சீனா அணியிடம் 1-5 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. இதையடுத்து இன்று(செப்டம்பர்21) இந்தியா தனது இரண்டாவது லீக் சுற்றில் விளையாடவுள்ளது.

இந்தியா தனது இரண்டாவது லீக் சுற்றில் வங்கதேச கால்பந்து அணியை எதிர் கொள்கின்றது. இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதும் இரண்டாவது லீக் சுற்று இன்று(செப்டம்பர்21) மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.