சத்துக்கள் நிறைந்த கருப்பு உளுந்து வடை! எவ்வாறு செய்வது என்று பாருங்க!!

0
125
#image_title
சத்துக்கள் நிறைந்த கருப்பு உளுந்து வடை! எவ்வாறு செய்வது என்று பாருங்க
நம் உடலுக்கு தேவையான சில ஊட்டசத்துக்களை வழங்கும் தானிய வகைகளில் கருப்பு உளுந்து ஒன்று. கருப்பு உளுந்து பெரும்பாலும் மாவு அரைக்க முன்பு பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் தற்பொழுது எங்கு பார்த்தாலும் வெள்ளை உளுந்து தான் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
அதற்கு காரணம் கருப்பு உளுந்து என்பது அதன் மேல் பகுதியில் கருப்பு தோல் இருக்கும். இந்த தோலை ஊற வைத்து பின்னர் அதை நீக்கி அதன் பின்னர் தான் மாவு அரைக்க பயன்படுத்த முடியும். ஆனால் வெள்ளை உளுந்து என்பது ஊற வைத்த பின்னர் நேரடியாக மாவு அரைக்க பயன்படுத்தலாம். இதனால் தான் தற்பொழுது கருப்பு உளுந்து விட மக்கள் அனைவரும் வெள்ளை உளுந்து பயன்படுத்த தொடங்கி விட்டனர்.
தற்பொழுது உளுந்த வடை என்று கூறினாலும் அதிலும் வெள்ளை உளுந்து தான் அதிக பங்கு வகிக்கிறது. அதாவது வெள்ளை உளுந்தை வைத்து தான். அதிக இடங்களில் வடை தயார் சொய்யப்படுகின்றது. இந்த பதிவில் கருப்பு உளுந்தை பயன்படுத்தி எவ்வாறு வடை தயார் செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.
கருப்பு உளுந்து வடை தயார். செய்ய தேவையான பொருட்கள்…
* கருப்பு உளுந்து – ஒரு கப்
* வெண்ணெய் – 2 ஸ்பூன்
* மிளகு – 2 ஸ்பூன்
* இஞ்சி – சிறிய துண்டு
* கறிவேப்பிலை – 2 ஆர்க்கு
* உப்பு – தேவையான அளவு
* எண்ணெய் – தேவையான அளவு
கருப்பு உளுந்து வடை செய்முறை…
அடுப்பை பற்ற வைத்து அதில் கடாய் ஒன்றை வைத்துக் கொள்ளவும். பின்னர் அதில் எடுத்து வைத்துள்ள ஒரு கப் கருப்பு உளுந்து சேர்த்து வாசனை வரும் வரை வறுக்க வேண்டும். பின்னர் மிக்சி ஜாரில் வறுத்த கருப்பு உளுந்தை சேர்த்து ரவை போல கரகரப்பாக அரைத்து பொடியாக்கிக் கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் அரைத்த இந்த கருப்பு உளுந்துடன் கறிவேப்பிலை, வெண்ணெய், மிளகு சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இஞ்சியை துறுவி இதில் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
15 நிமிடங்கள் கழிந்து அடுப்பை பற்ற வைத்து அதில் காய் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். அதன். பின்னர் எண்ணெய் சூடான பிறகு இதில் தயார் செய்து வைத்துள்ள கருப்பு உளுந்து மாவை சிறிதளவு எடுத்து வடை போல தட்டி எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்க சூடான கருப்பு உளுந்து வடை தயார்.
Previous articleநகை விற்கப் போகிறீர்களா..? இந்த நாளில் விற்றால் மீண்டும் தங்கம் வீட்டிற்கு வரும்..!!
Next articleகருமையான அக்குள் இருக்கா! அதை நீக்க இதோ சில வழிகள்!!