குழந்தைகளுக்கு சத்தான செரலாக்! வீட்டிலேயே எவ்வாறு தயார் செய்வது!!
குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் செரலாக் உணவை எவ்வாறு தயார் செய்வது என்பது பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
ஆறு மாதம் ஆன குழந்தைகளுக்கு உணவாக செரலாக் கெடுப்பது வழக்கமாகும். இந்த செரலாக்கை அதிகம் கடைகளில்தான் வாங்கி குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். இந்த செரலாக்கை நாம் வீட்டிலேயே தயார் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அதை எவ்வாறு தயார் செய்வது என்பது பற்றி பார்க்கலாம்.
செரலாக் செய்ய தேவையான பொருட்கள்…
* அரிசி – 1கப்
* ஓமம் – 1/8 டேபிள் ஸ்பூன்
* சீரகம் – 1/8 டேபிள் ஸ்பூன்
* கோதுமை ரவை – 1 டேபிள் ஸ்பூன்
* குதிரை வாலி அரிசி – 2 டேபிள் ஸ்பூன்
* பாதாம் – 5
* பாசிப்பருப்பு – 3 டேபிள் ஸ்பூன்
* மசூர் பருப்பு – 3 டேபிள் ஸ்பூன்
* கருப்பு உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
தயார் செய்யும் முறை…
* மேற்கூறிய அனைத்துப் பொருட்களையும் தனித்தனியாக கழுவி 5 முதல் 6 மணி நேரம் தனிததனியாக வெயிலில் உலர்த்திக் கொள்ள வேண்டும்.
* அதன் பின்னர் இவை அனைத்தையும் தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னரை இவற்றை அரைத்து பொடியாக்கி காற்று புகாத ஒரு பாட்டிலில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் பாத்திரம் வைத்துக் கொண்டு அதில் இரண்டு கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் செரலாக்கை சேர்த்து சமைத்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
இவ்வாறு தயார் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது இயற்கையான சத்துக்கள் குழந்தைகளுக்கு கிடைக்கும். மருத்துவரின் ஆலோசனை பெற்று அதன் பிறகு இந்த உணவை குழந்தைகளுக்கு கெடுக்கலாம்.