245 பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மகப்பேறு மருத்துவர்!! அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!!

Photo of author

By Amutha

245 பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மகப்பேறு மருத்துவர்!! அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!!

Amutha

Obstetrician who sexually assaulted 245 women!! The court gave an action verdict!!

245 பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மகப்பேறு மருத்துவர்!! அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!!

245 பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மகப்பேறு மருத்துவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

அமெரிக்க நாட்டில் உள்ள நியூயார்க் நகரின் மகப்பேறு மருத்துவர்  ராபர்ட் ஹேடன் வயது 64. இவர் கடந்த 1980 -ஆம் ஆண்டுகளில் இருந்து கொலம்பியா பல்கலைக்கழக இர்விங் மருத்துவ மையம், நியூயார்க் பிரஸ்பைடிரியன் மருத்துவமனை போன்ற முக்கிய மருத்துவமனைகளில் பணியாற்றி உள்ளார்.

இந்த நிலையில் அவர் தன்னிடம் மருத்துவ பரிசோதனைக்காக வரும் பெண்களில் பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் இவரது பாலியல் லீலைகள் பல வெளிவர தொடங்கின.

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பல பெண்கள் ராபர்ட்  ஹேடன் அவர்களால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளானதாக குற்றம் சாட்டினர். அவர்களில் சில பேர் துணிந்து போலீசிலும் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் அவருக்கு எதிராக கடந்த 2020இல் காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

மகப்பேறு டாக்டராக பணியாற்றிய காலகட்டத்தில் அவரால் 200க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர். இவர் மீதான வழக்கு நீதிபதி ரிச்சர்ட் எம்.பெர்மன் முன் விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிந்த நிலையில் இந்த வழக்கில் 9 பெண்கள் மட்டுமே சாட்சியம் அளித்தனர். இதனால் குற்றம் சாட்டப்பட்ட ராபர்ட்டுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.

இந்த சம்பவம் குறித்து புலனாய்வுத்துறை அதிகாரிகள் கூறுகையில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான பெண் நோயாளிகளிடம் ராபர்ட் ஹேடன் பாலியல் அத்துமீறல்களை செய்துள்ளார். பலரை பாலியல் பலாத்காரமும் செய்துள்ளார். இதில் குறைந்தது 245 பெண்கள் தாங்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக புகார் தெரிவித்துள்ளனர். இவர்களில் சிலர் மட்டுமே நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தனர். இதன் காரணமாக ராபர்ட் ஹேடனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.