அடிக்கடி சிறுநீர் கழிப்பவரா நீங்கள்!! அப்படி என்றால் இது உங்களுக்காக தான்!!

0
37

அடிக்கடி சிறுநீர் கழிப்பவரா நீங்கள்!! அப்படி என்றால் இது உங்களுக்காக தான்!!

அடிக்கடி சிறுநீர் கழித்தல் பிரச்சனையை சரி செய்வதற்கும், குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பதை சரி செய்வதற்கும் தேவையான ஒரு அருமையான மருத்துவ குறிப்பை இங்கு பார்ப்போம்.

இதற்கான காரணங்கள்:
1. சர்க்கரை நோய் இருப்பவர்கள் அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள். சர்க்கரை நோய் இல்லாமல் சிறுநீர் அடிக்கடி கழிக்கிறார்கள் என்றால் அதை ஆரம்பத்திலேயே பார்த்து சரி செய்து விட வேண்டும்.

2. சிறுநீரகத்தில் ஏதேனும் கற்கள் சிறுநீரகத்தில் தொற்று போன்றவை இருந்தாலும் அடிக்கடி சிறுநீர் கழித்தல் பிரச்சனை ஏற்படும்.

3. இவ்வாறு எந்த பிரச்சனையும் இல்லாமலே அடிக்கடி சிறுநீர் கழிப்பது எதனால் என்றால், நம்முடைய சிறுநீரக பையில் இரண்டு கப் அளவு சிறுநீர் சேரும். ஆனால் சில பேருக்கு ஒன்றரை கப்பளவு சிறுநீர் சேர்ந்தாலே சிறுநீரக பையில் இருந்து வெளியே வர ஆரம்பிக்கும். அதனாலேயே சிலர் சிறுநீர் கழிக்க வேண்டும் என்று இருப்பார்கள்.

4. இரவில் கெட்ட கனவு பயம் என்பது அதிகமாக இருந்தாலும் சிறுநீர் அடிக்கடி வரும்.

5. மேலும் நம் உடலுக்கு அடிக்கடி மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் அது சிறுநீரக மண்டலத்தை பாதித்து சிறுநீர் அடிக்கடி கழிக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.

எனவே சிறுநீரக மண்டலத்தில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்வதற்கும் நமக்கு அடிக்கடி சிறுநீர் வராமல் இருப்பதற்கும் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
நாவல் கொட்டை பொடி (1/2 ஸ்பூன்)
சுடு தண்ணீர்

செய்முறை:
ஒரு டம்ளர் அளவு வெதுவெதுப்பான சுடு தண்ணீரை எடுத்துக் கொண்டு அதில் அரை ஸ்பூன் அளவு நாவல் கொட்டை பொடியை சேர்த்து கலந்து கொள்ளவும். இதை தினமும் இரவு சாப்பிட்ட பிறகு தூங்குவதற்கு முன்பாக குடித்துவிட்டு தூங்க வேண்டும். சர்க்கரை நோய் இருப்பவர்கள் இதில் கூடுதலாக இனிப்பு எதுவும் சேர்க்காமல் அப்படியே குடித்து வர வேண்டும்.

சர்க்கரை நோய் இல்லாதவர்கள் இதில் சுவைக்காக நாட்டு சர்க்கரை பனைவெல்லம் போன்றவற்றை கலந்தும் குடித்து வரலாம். எனவே இதைத்தொடர்ந்து குடித்து வர அடிக்கடி சிறுநீர் கழித்தல் பிரச்சனை சரியாகும்.

author avatar
CineDesk