சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகில் உள்ள பல நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 3,51,32,563 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை 2,61,23,267 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில், 79,71,335 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 66,100 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். கொரோனா தொற்று பாதிப்புக்கு இதுவரை உலக அளவில் 10,37,961 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளது.
அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 76,00,846 பேர் ஆக உயர்ந்துள்ளது. இதில் 48,18,509 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், 25,68,060 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கொரோனா தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 2,14,277 பேர் ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 68,47,413 பேர் ஆக உயர்ந்துள்ளது. இதில் 55,06,732 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், 9,38,869 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கொரோனா தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,01,812 பேர் ஆக உயர்ந்துள்ளது.