நாட்டையே உலுக்கிய “ஒடிசா ரயில் விபத்து”!! எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட முக்கிய தகவல்!!
நாட்டையே உலுக்கிய ஒரு கோர விபத்து தான் ஒடிசா மாநிலத்தில் மூன்று ரயில்கள் மோதிக்கொண்டது ஆகும். ஒடிசாவில் உள்ள பாலசோர் என்னும் மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் இரண்டாம் தேதி அன்று மூன்று ரயில்கள் ஒன்றாக மோதி பெரிய விபத்து ஏற்பட்டது.
இதில், மொத்தம் 295 பேர் பலியாகி உள்ளனர். மேலும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து சி.பி.ஐ தரப்பினர் தற்போது விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது விபத்தில் சந்தேகத்தின் பேரில் ரயில்வே மூத்த பொறியாளரான அருண் குமார் மகந்தோ, பகுதியை பொறியாளரான முகமது அமீர் கான் மற்றும் தொழில்நுட்ப ஊழியர் பப்பு குமார் ஆகியோரை சி.பி.ஐ துறையினர் கைது செய்தனர்.
தற்போது இந்த கோர விபத்தில் உயரிழந்த 29 பேர்களின் உடல்களை அடையாளம் காண முடியவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த சடலங்கள் அனைத்தும் புவனேசுவரத்தில் இருக்கின்ற எய்ம்ஸ் மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இந்த இறந்த உடல்களின் மரபணுக்கள் டெல்லியில் உள்ள மத்திய ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் முடிவு வந்த உடன் சடலங்கள் அனைத்தும் அடையாளம் கண்டறியப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று எய்ம்ஸ் மருத்துவமனை கூறி உள்ளது.
அடையாளம் காணாமல் மீதமுள்ள உடல்களை தகனம் செய்வது குறித்து மத்திய அரசு விரைவில் முடிவு எடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.