உயிரிழந்த 49 பேரில் 3 பேருக்கு ஏதும் இல்லை! உச்சகட்ட அச்சத்தில் தமிழக மக்கள்!

Photo of author

By Parthipan K

நேற்று கொரோனாவால்  பாதிக்கப்பட்டு உயிரிழந்த 49 பேரில் 3 பேர் எந்த அறிகுறியும் தென்படாதவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.  

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா  வைரசின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த நோயை கட்டுப்படுத்த மாநில அரசும், அந்தந்த மாவட்ட நிர்வாகங்களும் பல நடவடிக்கைகளை எடுத்து வந்தபோதிலும், பாதிப்பு குறையும் படி தெரியவில்லை. மேலும் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கும் தற்போது தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில் நேற்று மட்டும் ஒரே நாளில் 1,515 பேருக்கு தமிழகத்தில் கொரோனா  உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவின்  தலைநகரமாக இருக்கும் சென்னையில் இதுவரை 34 ஆயிரத்து 245  பாதிப்பு பதிவாகியுள்ளது. இதில் 26 ஆயிரத்து 782 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நேற்றைய தினம் மட்டும் 49 பேர் தமிழகத்தில் கொரோனாவால்  உயிரிழந்த நிலையில், இறப்பு எண்ணிக்கை 528 ஆக உயர்ந்துள்ளது. இந்த 49 பேரில் மூன்று பேர் எந்தவித அறிகுறியும் இல்லாமல் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.