அட!! இத்தனை நாட்களாக இது தெரியாமல் போய்விட்டதே!! ஒரு கொத்து இலையில் இவ்வளவு பயன்களா?

0
205
#image_title

அட!! இத்தனை நாட்களாக இது தெரியாமல் போய்விட்டதே!! ஒரு கொத்து இலையில் இவ்வளவு பயன்களா?

முருங்கைக் கீரை பற்றி பலரும் அறியாத மருத்துவ பயன்களை பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம். நம்மில் பலருக்கு முருங்கைக் கீரையை கடைசியாக எப்போது சாப்பிட்டோம் என்று யோசித்தால் கண்டிப்பாக விடை தெரியாது.

விலை மலிவாக கிடைக்கும் காரணத்தினால் முருங்கைக் கீரையை யாரும் அதிகமாக உபயோகப்படுத்துவதில்லை. இப்போது இருக்கும் குழந்தைகளுக்கு முருங்கைக்கீரை என்றால் சுத்தமாக பிடிக்காது. இனிமேலாவது அதில் இருக்கக்கூடிய மருத்துவ குணங்களை அறிந்து நாம் அனைவரும் முருங்கைக் கீரையை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நம் உடம்பிற்கு தேவையான அமினோ அமிலங்களில் 9 அமினோ அமிலங்கள் இந்த முருங்கைக் கீரையில் உள்ளது. வேறு எந்த தாவரங்களிலும் இல்லாத மைக்ரோ நியூட்ரியன்ட்ஸ் இதில் மிகுந்து காணப்படுகிறது. மேலும் மற்ற தாவரங்களை ஒப்பிடும்போது முருங்கைக் கீரையில் 25 மடங்கு அதிகமான இரும்புச் சத்து உள்ளது.

இரும்புச்சத்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வதற்கு பதிலாக முருங்கைக் கீரையை நாம் சாப்பிட்டு வந்தால் உடம்பிற்கு மிகவும் நல்லது. முருங்கைக் கீரையை ஒரு நாள் விட்டு ஒரு நாள் உணவில் நாம் சேர்த்துக் கொண்டு வர ரத்தசோகை பிரச்சனை முழுவதுமாக குணமடையும்.

கால்சியம் நம் உடம்பிற்கு மிகவும் முக்கியமான ஒன்று. அதை பாலின் மூலமாக நாம் எடுத்துக் கொண்டு இருக்கிறோம். 100 மில்லி லிட்டர் பால் குடித்தால் அதில் நமக்கு 200 கிராம் கால்சியம் மட்டுமே கிடைக்கும். அதுவே 100 கிராம் முருங்கைக் கீரையை நாம் உண்டு வந்தால் 314 மில்லி கிராம் கால்சியம் நமக்கு கிடைக்கும்.

இது மட்டும் இன்றி நம் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய பொட்டாசியம் சத்தை முருங்கை கீரை நமக்கு தருகிறது. முருங்கைக் கீரையில் குறைந்த அளவு கலோரி இருப்பதனால் உடல் பருமன் அதிகமாக உள்ளவர்களும் தாராளமாக இதை சாப்பிட்டு வரலாம். அதேபோல் நீரழிவு நோய், இதய நோயாளிகள் மற்றும் மலச்சிக்கல்கள் இருப்பவர்களும் இந்த முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

முக்கியமாக செரிமான கோளாறுகளை இது முற்றிலும் சரி செய்கிறது. இந்த முருங்கைக் கீரையை சூப் வைத்தும் அல்லது பொறியலாக செய்தும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். முருங்கைக் கீரையை இலையாக சேர்த்துக் கொள்ள முடியாதவர்கள் இதை பவுடராகவும் சேர்த்துக் கொள்ளலாம்.

Previous articleகருமுட்டை நன்கு வளர்ச்சி அடைந்து குழந்தை பாக்கியம் கிடைக்க இதை மூன்று நாட்களுக்கு கண்டிப்பா சாப்பிடுங்க!!
Next articleகாலையில் வெறும் வயிற்றில் டீ குடிப்பவரா நீங்கள்? அப்போது கண்டிப்பாக இதை தெரிந்து கொள்ளுங்கள்!!