ஐயோ அம்மா காப்பாத்துங்கள்.. ரயில்நிலையத்தில் இரத்த வெள்ளத்தில் சரிந்த பெண்!!
தமிழகத்தில் தினமும் குற்றம் நடைபெறும் நிலையில் காவல் துறையினர் குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர். இருப்பினும் பெண்களுக்கு ஏற்படும் அவல நிலை இருந்து கொண்டு தான் இருக்கிறது.
இந்த வரிசையில் நேற்று இரவு திருவள்ளூர் ரயில் நிலையத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. எப்போதும் பயணிகளின் கூட்டத்தால் பிஸியாகவே இருக்கும் ரயில் நிலையம் நேற்றும் அதே போல இருந்தது.
அப்போது ஸ்டேஷனின் மூன்றாவது நடைமேடை அருகே இளம் பெண் ஒருவர் உடம்பில் ஆடை இல்லாமல் ரத்த வெள்ளத்தில் வெட்டுப்பட்டு கிடந்துள்ளார்.
அந்த பெண்ணின் முகம், கை, கால் என அனைத்து இடங்களிலும் காயப்பட்டு இருந்தது. மொத்தம் 50 இடங்களில் பிளேடால் சரமாரியாக வெட்டப்பட்டு இருந்தது.
இச்சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து திருவள்ளூர் போலீஸாருக்கு தகவல் கொடுத்த நிலையில் அவர்கள் அப்பெண்ணை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.
இவரை பற்றி விசாரித்த பொது இந்த பெண் அன்னனூர் பகுதியை சேர்ந்தவர் என்றும், அம்பத்தூரில் ஒருவருடன் இவர் திருவள்ளூர் வந்ததாகவும் அவர் இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது.
அந்த அம்பத்தூரைச் சேர்ந்த இளைஞர் யார் என்று போலீஸார் தேடி வருகின்றனர். இந்த தகராறுக்கான காரணம் என்ன என்பதையும் விசாரித்து வருகின்றனர்.
மேலும் இதற்கு எல்லாம் பதில் அந்த தலைமறைவாக இருக்கும் இளைஞரை பிடித்தால் தான் தெரியும் என்றும் கூறப்படுகிறது. காயப்பட்ட பெண் இன்னும் ஆபத்தான நிலையை தாண்டவில்லை தொடர்ந்து முயற்ச்சித்து வருகிறோம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இச்சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.