அடடா.. சீதாப்பழம் சாப்பிட்டால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா? தெரியாம போச்சே..

0
113
#image_title

அடடா… சீதாப்பழம் சாப்பிட்டால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா? தெரியாம போச்சே…

சீத்தாப்பழம் பார்ப்பதற்கு என்னவோ கொஞ்சம் வித்தியசமாக இருக்கும். ஆனால், அதன் நன்மைகள் ஏராளம். இப்பழத்தில் வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உட்பட ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. சீதாப்பழம் அமெரிக்கா, மேற்கிந்தியத் தீவுகளை தாயகமாகக் கொண்டவை.

இப்பழத்தின் தோல், விதை, இலை, பட்டை என அனைத்துமே மருத்துவ குணம் கொண்டவை.

சீத்தாப்பழத்தில் நீர்ச்சத்து, மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்றவை அதிகமாக இருக்கிறது.

இப்பழத்தை நாட்டு சீத்தா, முள்சீத்தா, ராம்சீத்தா என அழைக்கின்றன.

சரி வாங்க… இப்பழத்தைப் சாப்பிட்டால் நமக்கு எவ்வளவு நன்மை கிடைக்கும் என்று பார்ப்போம் –

இரத்த அழுத்தம்

சீத்தாப்பழம் நாம் சாப்பிட்டால் அதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் சத்துக்கள் நம்முடைய இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.

மலச்சிக்கல்

சீத்தாப்பழத்தை சாப்பிடுவதால் வந்தால் மலச்சிக்கல் பிரச்சினை குணமாகும்.

முகம் அழகாக

சீத்தாப்பழத்தில், உப்பு கலந்து பருக்கள் மேல் பூசி வந்தால் பருக்கள் மறைந்து போகும். இதனால் உங்கள் சருமம் மிளிருகும்.

முடி வளர

சீத்தாபழம் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள வைட்டமின் ஏ தலைமுடியை வளரச் செய்யும்.

பேன் ஒழிய

நாம் சாப்பிட்டு தூக்கி எறியும் சீத்தாப்பழ விதைகளை வெயிலில் நன்றாக காய வைத்து, அதை பொடி செய்து, அதை சிறுபயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி மிருதுவாகும். பேன் தொல்லை ஒழியும்.

எலும்புகளுக்கு

சீத்தாப்பழம் சாப்பிட்டால், அதில் உள்ள கால்சியம் எலும்புகளையும், பற்களையும் வலுவாக்கும்.

ஆஸ்துமாக்கு

சீத்தாப்பழத்தை சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள வைட்டமின் பி6 மூச்சுக்குழாயில் ஏற்பட்டுள்ள புண்களை சரி செய்யும். ஆஸ்துமா உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிட்டு வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும்.

மாரடைப்பு

சீத்தாப்பழத்தை சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள மக்னீசியம் சத்து மாரடைப்பு வரும் அபாயத்தை தடுக்கும். மேலும், தசைகளை தளர்த்தி ரிலாக்ஸ் செய்யும்.

குறிப்பு

சீத்தாப்பழத்தில் சர்க்கரை அதிகமாக இருப்பதால்சர்க்கரை நோயாளிகள் அதிகம் சாப்பிட கூடாது.

Previous articleஇயற்கை முறையில் வீட்டில் உள்ள கொசுக்களை விரட்ட வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!! 5 நிமிடத்தில் நல்ல தீர்வு கிடைக்கும்!!
Next articleதைராய்டு நோய் உள்ளவர்கள் நீங்கள்!!? அப்போ இந்த ஆசனங்கள் எல்லாம் கட்டாயமாக செய்ய வேண்டும்!!!