அடடா என்ன ஒரு டேஸ்டான வெங்காய சட்னி!! இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

0
97
#image_title

அடடா என்ன ஒரு டேஸ்டான வெங்காய சட்னி!! இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

நம் விருப்ப உணவுகளில் ஒன்றான இட்லி மற்றும் தோசைக்கு வித்தியாசமாக வெங்காய சட்னி செய்து சாப்பிட்டு பாருங்கள்.சுவை மிகவும் அருமையாக இருக்கும்.ஒரு முறை செய்து ருசி பார்த்து விட்டால் மீண்டும் மீண்டும் செய்து சாப்பிட தூண்டும்.இந்த வெங்காய சட்னியை குறைந்த நேரத்தில் செய்து விட முடியும்.இந்த சட்னி சுவையாக செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

*பெரிய வெங்காயம் – 2(நறுக்கியது)

*கடலைப் பருப்பு – 1 தேக்கரண்டி

*கொத்தமல்லி விதை – 1 தேக்கரண்டி

*வெந்தயம் – 1/4 தேக்கரண்டி

*வர மிளகாய் – 7

*புளி – ஒரு பெரிய எலுமிச்சம் பழ அளவு

*கடுகு – 1/2 தேக்கரண்டி

*உளுந்து – 1/2 தேக்கரண்டி

*பூண்டு – 2 பற்கள்

*எண்ணெய் – தேவையான அளவு

*உப்பு – தேவையான அளவு

செய்முறை:-

முதலில் 2 பெரிய வெங்காயத்தை எடுத்து தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.பின்னர் அடுப்பில் கடாய் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அவை சூடேறியதும் அதில் 1 தேக்கரண்டி கடலை பருப்பு போட்டு பொரிய விடவும்.பின்னர் 1 தேக்கரண்டி கொத்தமல்லி விதை,1/4 தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து நன்கு வறுக்கவும்.பின்னர் இதை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.

பின்னர் அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயம் மற்றும் புளி சேர்த்து வதக்கவும்.பின்னர் அடுப்பை அணைக்கவும்.இதை நன்கு ஆற விடவும்.பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் ஏற்கனவே வறுத்து வைத்துள்ள கொத்தமல்லி விதை,வெந்தயம்,கடலை பருப்பு சேர்த்து நன்கு அரைக்கவும்.அடுத்து அதில் வதக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து அரைக்கவும்.பின்னர் இதை ஒரு பவுலுக்கு மாற்றிக் கொள்ளவும்.

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.பின்னர் கடுகு,உளுந்து பருப்பு சேர்த்து பொரிய விடவும்.அடுத்து 2 பல் பூண்டு எடுத்து இடித்து அதில் சேர்த்து கொள்ளவும்.பின்னர் அடுப்பை அணைத்து தாளித்த கலவையை அரைத்து வைத்துள்ள விழுதில் கலந்து கொள்ளவும்.

Previous articleகொய்யா இலையின் பயன்கள் மற்றும் அதில் தயாரிக்கப்படும் தேநீரை குடித்தால் உடலுக்கு கிடைக்கும் அற்புத நன்மைகள் குறித்த விவரம் இதோ!!
Next articleகுழந்தையின்மை பிரச்சனைக்கு தீர்வு தரும் கல்யாண முருங்கை!!! இதை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளுங்கள்!!!