ஒரு பக்கம் ஆடியோ லாஞ்ச் கேன்சல் ஆனதால் சோகத்தில் இருக்கும் ரசிகர்கள்!!! இன்ப அதிர்ச்சி கொடுக்கவுள்ள லியோ படக்குழு!!! 

Photo of author

By Sakthi

ஒரு பக்கம் ஆடியோ லாஞ்ச் கேன்சல் ஆனதால் சோகத்தில் இருக்கும் ரசிகர்கள்!!! இன்ப அதிர்ச்சி கொடுக்கவுள்ள லியோ படக்குழு!!!

லியோ திரைப்படத்தின் ஆடிய லாஞ்ச் ரத்து செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியானதை அடுத்து சோகத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து மகிழ்ச்சியை அளிக்க லியோ படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கு மத்தியில் லியோ திரைப்படத்தின் புரோமோசன் வேலைகளில் படக்குழு தற்பொழுது தொடங்கியுள்ளது. அதன் படி வரும் செப்டம்பர் 30ம் தேதி லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவிருந்தது.

இதற்கான வேலைகள் அனைத்தும் மும்முரமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று (செப்டம்பர்26) இரவு லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டதாக தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் அறிவித்தது.

இந்த அறிவிப்பால் ரசிகர்கள் அனைவரும் அச்சத்தில் மூழ்கியுள்ளனர். மேலும் சமூக வலைதளங்களில் லியோ ஆடிய லாஞ்ச் ரத்து ஆனது தான் டிரெண்டிங்கிள் உள்ளது. இந்நிலையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஒரு தகவல் கிடைத்துள்ளது.

அதாவது லியோ திரைப்படத்தின் டிரெய்லர் குறித்த ஒரு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி லியோ திரைப்படத்தின் டிரெய்லர் அக்டோபர் முதல் வாரத்தில் அதாவது அடுத்த வாரத்தில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. ஆகிய லாஞ்ச் ரத்தான சோகத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு இந்த செய்தி ஒரு ஆறுதலை கொடுத்துள்ளது.