தீபாவளியை முன்னிட்டு ரயிலில் முன்பதிவு தொடக்கம்!! தெற்கு ரயில்வே அறிவிப்பு!!

Photo of author

By CineDesk

தீபாவளியை முன்னிட்டு ரயிலில் முன்பதிவு தொடக்கம்!! தெற்கு ரயில்வே அறிவிப்பு!!

CineDesk

On the eve of Diwali, train bookings have started!! Southern Railway Notice!!

தீபாவளியை முன்னிட்டு ரயிலில் முன்பதிவு தொடக்கம்!! தெற்கு ரயில்வே அறிவிப்பு!!

நாட்டில் பல போக்குவரத்து வசதிகள் இருந்தாலும் மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். பேருந்து போக்குவரத்து அதிகமாக இருக்கும் பட்சத்தில் பயணம் செய்பவர்கள் இந்த ரயில் போக்குவரத்தையே சௌகரியமாக நினைக்கின்றனர்.

மக்களின் நலனுக்காக தெற்கு ரயில்வே தினமும் புது திட்டங்களை கொண்டு வந்துக்கொண்டே இருக்கிறது. ரயிலில் பண்டிகை நாட்கள் மற்றும் விடுமறை நாட்களில் கூட்டம் மிகுந்து காணப்படும்.

இதற்காக தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களையும் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தீபாவளி பண்டிகை கொண்டாட உள்ளது. நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் இந்த தீபாவளி பண்டிகைக்கு பல மக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வார்கள்.

இதற்காக சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் என பல இயக்கப்பட்டாலும், பல பேர் முன்பே திட்டமிட்டு வழக்கமாக இயக்கப்படும் ரயில்களில் மட்டுமே முன்பதிவு செய்ய விரும்புவர்.

எனவே பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் வசதிக்காக ஐஆர்சிடிசி 120 நாட்களுக்கு முன்னதாகவே பயண சீட்டு முன்பதிவு செய்யும் முறையை பின்பற்றி வருகிறது.

அந்த வகையில் தற்போது நவம்பர் மாதத்தில் வர உள்ள இந்த தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்பவர்கள் முன்பதிவு செய்யும் விவரத்தை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

அதன்படி, நவம்பர் 9ஆம் தேதி ஊருக்கு செல்பவர்கள் ஜூலை 12 ஆம் தேதி முதலும் அதேபோல் நவம்பர் 10 ஆம் தேதி செல்ல விரும்புபவர்கள் ஜூலை 13 ஆம் தேதி முதலும் மற்றும் நவம்பர் 11 ஆம் தேதியில் செல்பவர்கள் ஜூலை 14 ஆம் தேதி முதலும் மேலும் நவம்பர் 12 ஆம் தேதி செல்பவர்கள் ஜூலை 15 ஆம் தேதியும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று ரயில்வே அறிவித்துள்ளது.