சருமத்தின் அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் ஒரு துளசி இலை போதும்!!
துளசி செடி இருமலுக்கு தீர்வான ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் துளசி செடி நமது சருமத்தின் அனைத்து விதமான பிரச்சனைகளையும் சரி செய்யும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
துளசியில் நமது சருமத்திற்கு இருக்கும் தேவையான பயன்கள்:
* துளசியில் ஆன்டி ஆக்ஸிடண்ட் அதிக அளவில் இருக்கிறது. இதனால் விரைவாக வயதாகும் தன்மையை தள்ளிப் போடுகிறது.
* தோல் சிவப்பதும் தோல் எரிச்ஞலும் தோல் சுருக்கத்தை நமக்கு தருகிறது. இதை சரி செய்ய துளசி நமக்கு உதவுகிறது.
* பங்கஸ் தொற்று மற்றும் பேக்டீரியா தொற்றுகளுக்கு எதிரான பண்புகளை துளசி நமக்கு வழங்குகிறது.
* முகப்பருக்களுக்கு காரணமான கிருமிகளை துளசி பரவாமல் தடுக்கின்றது.
* துளசி இலையுடன் வேப்ப மரத்தின் இலையை வைத்து அரைத்து அதனுடன் தேன் கலந்து நமது முகத்திற்கு பயன்படுத்தினால் முகப்பரு வராமல் தடுக்கலாம்.
* வெயிலில் வெளியே சென்று விடுவதால் சருமம் கருப்பாக மாறும். துளசியில் வைட்டமின் சி இருப்பதால் சருமம் இழந்த நிறத்தை மீண்டும் பெற துளசி பயன்படுகிறது. மேலும் கரும்புள்ளிகளை நீக்கவும் துளசியை பயன்படுத்தலாம்.
* துளசி பொடி, தேன், எலுமிச்சை சாறு போன்றவற்றை கலந்து சருமத்திற்கு பயன்படுத்தினால் சருமம் மிருதுவாக மாறும்.
* துளசியில் இயற்கையாகவே எண்ணெய் பதம் இருப்பதால் சருமத்தின் தண்ணீர் பதத்தை பாதுகாக்கும். மேலும் நீரின்றி வரண்டுபோன சருமத்தை மிருதுவாகவும் பொலிவாகவும் மாற்றும்.
* துளசி இலைகளை நன்றாக கழுவி சுத்தம் செய்து தயிர் அல்லது யோகர்டில் சேர்த்து பயன்படுத்தினால் சருமத்தை அது சுத்திகரிக்கும்.