சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சுப் பழத்தில் அதிக மருத்துவ குணம் உள்ளது. அதில் வைட்டமின் சி அதிகம் நிறைந்திருப்பதால், உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கும். மேலும், கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டீன் போன்ற பல சத்துக்கள் அடங்கியுள்ளன.
சரி… தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால் உடலுக்கு எவ்வளவு நன்மை என்று பார்ப்போம் –
உடல் எடை குறைக்க
தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால், அதில் உள்ள குறைவான கலோரிகள் உடல் எடையை குறைக்க உதவி செய்யும்.
செரிமானத்திற்கு
ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால் வயிற்றிலுள்ள கழிவுகளை வெளியேற்றி பசியைத் தூண்டும். இதனால், மலச்சிக்கல் செரிமான கோளாறு உள்ளவர்களுக்கு ஆரஞ்சு ஜூஸை குடித்து வந்தால்.
சளிக்கு
தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால், ஆரஞ்சு பழத்தில் உள்ள நார்சத்துக்கள் சளி, ஆஸ்துமா, காசநோய், தொண்டைப்புண் போன்றவற்றை குணப்படுத்தும்.
கர்ப்பிணிகள்
கர்ப்பிணிகள் தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால், வாந்தி, மயக்கத்தை கட்டுப்படும். நம் ரத்தத்தில் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கச் செய்யும்.
கண் பார்வைக்கு
தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால், கண் பார்வை குறைபாடு பிரச்சினை குணமடையும். மேலும், பார்வை இழப்பு நேராமல் பார்த்துக்கொள்ளலாம்.
முக அழகிற்கு
தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால், முகத்தை பிரகாசிக்கச் செய்யும், என்றும் இளமையோடு இருக்கலாம். மேலும், முகப்பரு, கீரல், பரு தடையங்கள், திட்டுக்கள் அனைத்தும் நீங்கும். மேலும், இறந்த செல்களால் சரும சேதாரத்தையும் தடுக்கச் செய்யும்.
நோய் எதிர்ப்பு சக்தி
தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால், ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.
சிறுநீரகத்திற்கு
தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால், சிறுநீரகத்தில் ஏற்படும் பிரச்சனை தவிர்த்து விடலாம்.
மலச்சிக்கல்
தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால், ஆரஞ்சு பழத்தில் நார்சத்துக்கள் மலசிக்கல் பிரச்சனையை குணப்படுத்தும்.