நரை முடியை கருப்பாக மாற்ற பப்பாளி இலை ஒன்று போதும்!! அப்புறம் பாருங்கள் நடக்கின்ற மாயாஜாலத்தை..!!

Photo of author

By Divya

நரை முடியை கருப்பாக மாற்ற பப்பாளி இலை ஒன்று போதும்!! அப்புறம் பாருங்கள் நடக்கின்ற மாயாஜாலத்தை..!!

Divya

நரை முடியை கருப்பாக மாற்ற பப்பாளி இலை ஒன்று போதும்!! அப்புறம் பாருங்கள் நடக்கின்ற மாயாஜாலத்தை..!!

அக்காலம் முதல் இக்காலம் அனைவரும் இருக்கும் பெரும் பிரச்சனை தலை நரை. இந்த பிரச்சனை வயதானவர்களுக்கு மட்டும் இல்லை இளம் வயது ஆண், பெண் மற்றும் சிறுவர்கள் என்று அனைவருக்கும் வரக் கூடிய ஒன்றாக இருக்கிறது.

இளம் வயதினருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டால் அவர்கள் சிறு வயதிலேயே முதுமை தோற்றத்தை அடைந்ததை போல் காட்சி தருகிறார்கள். இதற்கு வாழ்க்கை முறை மாற்றம், உணவு முறை, தலைக்கு ரசாயன ஷாம்பு உபயோகிப்பது போன்றவை முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது. இந்த இளநரை பிரச்சனையை இயற்கை முறையில் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு தீர்வு காண்பது மிகவும் நல்லது.

தேவையான பொருட்கள்:-

*பப்பாளி இலை – 2

*இண்டிகோ பவுடர்(அவுரிப் பொடி) – 1தேக்கரண்டி

செய்முறை:-

முதலில் ஒரு பப்பாளி இலை எடுத்து அதனை தண்ணீர் கொண்டு சுத்தமாக அலசி கொள்ளவும். பின்னர் அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்வும்.

பின்னர் இதை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைக்கவும். பிறகு இதை அவற்றை ஒரு பவுலுக்கு வடிகட்டி கொள்ளவும்.

அடுத்ததாக இண்டிகோ அதாவது அவுரி பொடி 1 தேக்கரண்டி அளவு எடுத்து வடிகட்டி வைத்துள்ள பப்பாளி இலை சாற்றில் சேர்த்து நன்கு கலந்து விடவும். இவ்வாறு செய்தால் இயற்கையான ஹேர் டை தயார்.

இந்த ஹேர் டையை தலை முடிகளின் வேர் பகுதிகளில் படும்படி தடவி 45 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். பின்னர் சுத்தமான நீரிலில் முடியை அலசவும்.

இவ்வாறு தொடர்ந்து பயன்படுத்தி வந்தோம் என்றால் நீண்ட நாட்களாக இருந்த வெள்ளை முடி நாளடைவில் கருப்பாக மாறும். பப்பாளி இலை சாற்றில் உள்ள அதிகளவு என்சைம்கள் முடிகளின் வளர்ச்சிக்கு பெரிதும் ஊக்கமளிக்கிறது.