உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! தினமும் சீரகத் தண்ணீர் பருகி வாருங்கள்!

Photo of author

By Parthipan K

உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! தினமும் சீரகத் தண்ணீர் பருகி வாருங்கள்!

பொதுவாக சீரகத்தை உணவில் ருசிக்காகவும் வாசனைக்காகவும் மட்டுமே சேர்த்துக் கொள்ளுவோம். சீரகம் என்பது நாம் அன்றாட சமையலில் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்றாக உள்ளது. சீரகத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வெதுவெதுப்பாகவும் அல்லது குளிர்ந்த பிறகும் குடிப்பதன் மூலம் என்ன பலன் என்று எந்த பதிவின் மூலம் காணலாம்.

குறிப்பாக இந்த சீரகத் தண்ணீர் கேன்சரை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதாக உள்ளது. வெறும் தண்ணீர் குடிப்பதற்கு பதிலாக இந்த சீரகம் கலந்த தண்ணீரை குடிக்கலாம். சீரகத் தண்ணீர் குடிப்பதன் மூலம் செரிமான பிரச்சனைகள் இருந்து விடுபடலாம்.

வாயு பிரச்சனை ,அசிடிட்டி இருப்பவர்கள் இந்த தண்ணீரை கட்டாயம் குடிக்க வேண்டும். இதனை குடிப்பதன் மூலம் உடலில் உள்ள கழிவுகள் நீங்கி உடல் பருமனை குறைக்கவும் உதவுகிறது. மேலும் சளி, இரும்பல் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் இந்த தண்ணீரை பருகி வந்தால் பலன் பெறலாம்.

இதில் அயன் சத்துக்கள் அதிகமாக உள்ளது. சிவப்பு அணுக்கள் குறைவாக உள்ளவர்கள் இந்த தண்ணீரை குடித்து வந்தால் ரத்தத்தின் சிவப்பணுக்கள் அதிகரிக்கும்.