இந்த ஒரு ஸ்பூன் போதும்!! ஒரே நாளில் பாத வெடிப்பு சரியாகிவிடும்!!

0
135

இந்த ஒரு ஸ்பூன் போதும்!! ஒரே நாளில் பாத வெடிப்பு சரியாகிவிடும்!!

ஒரே நாளில் பாத வெடிப்பு சரியாகி பாதங்கள் அழகாக இந்த ஒரு டீஸ்பூன் போதும்.தோல் வறட்சியும், அதிக உடல் எடையும்தான் பாத வெடிப்புக்கான முக்கியமான காரணிகள். நம் உடலில் நீர்ச்சத்து குறையும்போது தோல் வறண்டு, பாதத்தில் வெடிப்பு உண்டாகும். குளிர்காலத்தில், இயல்பாகவே தோலில் வறட்சி ஏற்படும்.

அதனால் பாதத்தில் வெடிப்பு உண்டாகும். நம் காலில் உள்ள தோல் மிகவும் தடிமனாக இருக்கும். அதற்குக் கீழே ஒரு கொழுப்பு அடுக்கு இருக்கும். உடல் எடை அதிகமாக இருந்தால், அந்த அடுக்கு இடம்மாறி தோலில் வெடிப்பு உண்டாகும்.

வெதுவெதுப்பான தண்ணீரில், தினமும் பாதத்தைக் கழுவி வந்தாலே வெடிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம். அதோடு காலையிலும் இரவிலும் பாதத்தைத் தண்ணீரில் நன்றாகக் கழுவி சுத்தம்செய்து மாய்ஸ்ச்சரைசரைப் பயன்படுத்தினால் வெடிப்பு ஏற்படாது.

பெட்ரோலியம் ஜெல்லி, ஆலிவ் ஆயில், கற்றாழை க்ரீம் போன்றவற்றை மாய்ஸ்ச்சரைசராகப் பயன்படுத்தலாம். எதுவுமே இல்லாதபட்சத்தில் தேங்காய் எண்ணெய் தடவலாம். பாதவெடிப்புகள் லேசாக இருந்தால் இந்த சிகிச்சைகள் போதுமானது.  எனவே இது போன்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வீட்டில் செய்யக்கூடிய வைத்தியம்.

தேவையான பொருட்கள்:

வேஸ்லின்

தக்காளி பழம் சாறு

எலுமிச்சை பழம் சாறு

பேஸ்ட்

செய்முறை:

1: முதலில் ஒரு கப்பில் 1 டேபிள் ஸ்பூன் வேஸ்லின் அரைப்பழம் தக்காளி சாறு மற்றும் அரைப்பழம் எலுமிச்சை பழம் சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பேஸ்ட் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும். ஒரு ஐந்து நிமிடம் நன்றாக இதனை கலந்தால் மட்டும் தான் பேஸ்ட் போல் வரும்.

2: மிதமான சூட்டில் வெந்நீரை எடுத்து அதில் நம் இரண்டு கால்களையும் ஒரு ஐந்து நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும். பின்பு நம் செய்து வைத்த கலவையை எடுத்து அந்த பித்தவெடிப்பில் தடவி ஒரு 15 நிமிடம் அப்படியே வைக்க வேண்டும்

இது போன்ற தொடர்ந்து ஒரு மூன்று நாட்கள் செய்து வந்தால் நம் காலில் உள்ள பித்தவெடிப்பு பாத வெடிப்பு அனைத்து பிரச்சினைகளையும் சரியாகிவிடும்.

Previous articleஇந்த ஒரு பானம் போதும்!! இனி தொப்பை இருந்த இடம் தெரியாமல் போகும்!!
Next articleஉடல்வலி தாங்க முடியலையா?? இதை செய்து பாருங்கள் உடனே வலி பறந்து போகும்!!