வெறும் 10 நிமிஷத்துல செஞ்சி அசுத்துற சூப்பர் டிஷ்!! இப்போவே ட்ரை பண்ணிபாருங்க!!

0
137

தற்போதைய காலத்தில் மழை காலத்திற்கு ஏற்றார் போல ஒரு சுவையான ரெசிபியை நாம் இப்போது பார்க்கப் போகின்றோம். கேரளாவில் பெரும்பாலான டீக்கடைகளில் வெங்காய வடை தான் மிகவும் ஸ்பெஷல். மேலும் மழைக்காலம் என்றாலே குழந்தைகள் வீட்டில் காரசாரமாக இருக்கும் உணவு வகைகளை விரும்பி சாப்பிட கேட்பார்கள். அதற்கு ஏற்றார்போல வெங்காய வடை உங்கள் வீட்டில் செய்து கொடுத்து பாருங்கள். உங்கள் குழந்தைகளுக்கு உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.

தேவையான பொருட்கள்:

பெரிய வெங்காயம்- 4
மைதா மாவு -அரை கப்
பூண்டு -10 பல்
இஞ்சி -ஒரு சிறிய துண்டு
பச்சை மிளகாய் -6
தனி மிளகாய் தூள் -ஒரு ஸ்பூன்
எண்ணெய் -கால் லிட்டர்
உப்பு -அரை ஸ்பூன்

செய்முறை :

முதலில் நான்கு பெரிய வெங்காயங்களை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவேண்டும். வெங்காயத்தினை தடிமனாக நறுக்காமல், சற்று மெல்லியதாகவே இருக்கும் வகையில் நறுக்கி கொள்ள வேண்டும். அப்போதுதான் வடை தட்டும்போது வெங்காயம் ஆனது உதிராமல் இருக்கும். ஒரு சிறிய துண்டு இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். அதனைப் போல் பூண்டையும் சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்க வேண்டும்.

பின் 4 பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பொடியாக இருந்தால்தான் பச்சைமிளகாய் சாப்பிடும் போது வாயில் தட்டுப்படாமல் இருக்கும். ஒரு பெரிய பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு 2 நிமிடங்கள் கைகளை பயன்படுத்தி வெங்காயத்தை உதறிவிட்டு பின் வெங்காயத்திலிருந்து நீர் விட ஆரம்பிக்கும் பொழுது, அதனுடன் நறுக்கி வைத்த இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் போன்றவற்றை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

அதனை எடுத்து, அதனுடன் எடுத்து வைத்துள்ள மைதா மாவில் சேர்த்து சிறிய வெங்காயத்தை சேர்த்து பிசைந்து கொள்ளவேண்டும். தண்ணீர் எதுவும் சேர்க்காமல் அப்படியே பிசைந்து கொள்ளவேண்டும். மைதா மாவினை முழுவதுமாக ஒரே தடவையில் சேர்ந்து விடக்கூடாது. சிறிது சிறிதாக பிசைந்து சிறிது நேரம் கழித்து அதற்கு ஏற்றால் போல் மாறும் போது சரியான பதத்திற்கு வரும் பொழுது மைதா மாவு முழுவதையும் சேர்த்து கொள்ள வேண்டும்.

ஒரு ஸ்பூன் மிளகாய்த் தூள், அரை ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும் என அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கலந்து விட்டு சிறு சிறு உருண்டைகளாக பிடித்து தட்டில் எடுத்து ,ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி வைத்து வடை போல தட்டி எண்ணெயில் போட வேண்டும். எண்ணெயில் போட்டு திருப்பி விட சிறிது நேரம் வரும்பொழுது வடை நிறம் மாறிய உடன் எண்ணெயில் இருந்து எடுத்துவிட வேண்டும். இந்த வடையை ஒரு முறை செய்து கொடுங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் இது மிகவும் பிடிக்கும்.

Previous articleஎதுவானாலும் அதிமுக தயார்தான்! ஓ.பி.எஸ். அதிரடி பேட்டி!
Next articleஅமேசான் பிரைம் டே சேல் 2021!! எக்கோ, ஃபயர் டிவி, கின்டெல் சாதனங்கள் புதிய சலுகை!! அட்டகாசமான சலுகைகள்!!