ஆன்லைன் சூதாட்டம்! அடுத்த மாதம் அமலாகும் புதிய விதிமுறை!

0
367
Online Gambling! The new rule will come into effect next month!
Online Gambling! The new rule will come into effect next month!

ஆன்லைன் சூதாட்டம்! அடுத்த மாதம் அமலாகும் புதிய விதிமுறை!

தற்போது வளர்ந்து வரும் காலகட்டங்களில் ஆண்டிராய்டு போன் இல்லாதவர்களே இருக்க மாட்டார்கள்.கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் வீட்டிலேயே இருக்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.

அதனால் பள்ளி செல்லும் மாணவர்களிடம் கூட தற்போது ஆண்டிராய்டு போன் வந்துவிட்டது.ஆனால் பலரும் அதனை முறையாக பயன்படுத்தாமல் ஆன்லைன் சூதாட்டங்களில் பணத்தை இழந்த பலர் தற்கொலை செய்துக் கொள்ளும் நிகழ்வு அதிகரித்து வருகின்றது.சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்க தமிழக அரசு புதிய மசோதா கொண்டு வந்தது அதற்கு ஆளுநர் ஒப்புதலுக்காக நிலுவையில் இருந்து வந்தது.

மேலும் ஆந்திர பிரதேசம்,தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் இதற்காக தடை சட்டத்தை அமல்படுத்தி உள்ளனர்.இருப்பினும் கோவா, சிக்கம் உள்ளிட்ட சில யூனியன் பிரதேசங்கள் மாநிலங்கள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அனுமதி அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது அந்த அறிவிப்பில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் ஆன்லைன் விளையாட்டுத் துறையை முறைப்படுத்த தேவை உள்ளது.சூதாட்டம், பந்தயம், விளையாட்டு ஆகியவற்றை இணையத்தில் செய்பவர்கள் இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு  செயல்பட வேண்டும்.

மேலும் அரசு விதிமுறைகளுக்கு உட்படும்  நிறுவனங்களுக்கு பதிவுக்கான முத்திரையை அரசு வழங்கும். அதனை இணைய விளையாட்டுகளில் வெளிப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர். அதனையடுத்து விளையாட்டிற்கான கட்டணங்கள் உள்பட பிற செலவுகள் செலுத்திய கட்டணத்தை திரும்ப பெறுவது விளையாடுபவர்களின் வங்கி விவரம் போன்ற விவரங்கள் ஆன்லைன் விளையாட்டுகளில் இடம்பெறும்.

குறிப்பாக  ஆன்லைன் விளையாட்டை விளையாடுபவர்கள் தங்களுடைய அடையாளத்தை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும்.மேலும் இதற்கு இந்திய முகவரி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.அதையடுத்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சுய ஒழுங்காற்று அமைப்புகளை ஏற்படுத்தி  அதனை மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

ஆன்லைன் விளையாட்டிற்கு மத்திய அரசு கொண்டு வந்துள்ள வரைவு விதிமுறைகள் அடுத்த மாதம் அமலாக வாய்ப்புள்ளது என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ஆன்லைன் விளையாட்டுகளின் முடிவுகளை வைத்து பந்தயம் நடத்த அனுமதி வழங்கபடாது.அனைத்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களும் சுய ஒழுங்காற்று அமைப்புடன் பதிவு செய்ய வேண்டியது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleவரி செலுத்தவில்லையா? வீட்டில் உள்ள பொருட்கள் ஜப்தி செய்யப்படும்!
Next articleமுதல்வர் அறிவித்த சலுகை! ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி!