முதல்வர் அறிவித்த சலுகை! ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி!

0
84
DMK MK Stalin-Latest Tamil News
DMK MK Stalin-Latest Tamil News

முதல்வர் அறிவித்த சலுகை! ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி!

அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஆகியோரின் அகவிலைப்படி உயர்வை உயர்த்த முதல்வர் ஆணையிட்டுள்ளதால் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் கடும் போராட்டம் நடத்தி வந்த நிலையில் அது சம்பந்தமாக ஆய்வு செய்ய குழு ஒன்று அமைக்கப்படும் என்று முதல்வர் கூறியதை அடுத்து போராட்டம் கலைக்கப்பட்டது.  இதனை அடுத்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோரின் நலன்களை இந்த அரசு எப்போதும் முன்னெடுத்து செயல்படும்.

முந்தை அரசினால் ஏற்பட்ட கடும் நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமைக்கு இடையேயும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த அரசு அளித்த வாக்குறுதிகளை படிப்படியாக முன்னேற்ற முயற்சி செய்து வருகிறது.  இவர்களின் பல நாள் கோரிக்கையான அகவிலைப்படி உயர்வை பரிசீலித்து 1.1.2023 முதல் வழங்க முடிவு செய்துள்ளது.

இதன்படி 34 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 38 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது இது இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வருகிறது எனவும் தெரிவித்தார். இதன் மூலம் அகவிலைப்படி நான்கு சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் பலன் பெறுவார்கள். இதனால் ஆண்டு ஒன்றுக்கு 2359 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் எனினும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த அரசு கூடுதல் நிதி சுமையை ஏற்றுள்ளது எனவும் தெரிவித்தார்.

இதனால் மகிழ்ச்சி அடைந்த ஜாக்டோ- ஜியோ,  தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம்,  தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம், அலுவலர் ஒன்றியம் மற்றும் அரசு ஆசிரியர்கள் சங்கம் உட்பட பல்வேறு அரசு சார்ந்த சங்கங்களின் நிர்வாகிகள் முதல்வரை நேரில் சந்தித்து அகவிலைப்படி உயர்வை உயர்த்திய முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.