இந்த கோவிலுக்கு செல்ல நான்கு நாட்கள் மட்டுமே அனுமதி! கோவில் நிர்வாகம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்வதற்கு 4 மக்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் ஒரு மலைக்கோவில். இந்த கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த நான்கு நாட்கள் கோவில் நிர்வாகத்தால் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்த மலை கோவிலுக்கு செல்வதற்கு மதுரை மாவட்டம் சாப்டூர் அருகே உள்ள வாழை தோப்பு பகுதியில் இருந்தும், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு பகுதியில் இருந்தும், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் வருச நாடு பகுதியில் இருந்தும் மலைப்பாதைகள் உள்ளன.
இந்த பாதைகளில் வத்திராயிருப்பு பகுதியில் இருந்து செல்லும் பாதை கடினமற்றது என்பதால் விருதுநகர் மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் உள்ள மக்கள் இந்த பாதையை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.
இதையடுத்து இன்று ஜூன் 15 தேதி பிரதோஷம் மற்றும் 17-ஆம் தேதி அமாவாசையை முன்னிட்டு பக்தர்களுக்கு கோவில் நிர்வாகத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று வியாழக்கிழமை தொடங்கி 18-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை நான்கு நாட்களுக்கு மலையேறிச் சென்று பக்தர்கள் சுவாமி வழிபாடு செய்யலாம்.
மேலும் முக்கியமாக 10 வயதிற்கு உட்பட்டவர்களும், 60 வயதிற்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி இல்லை. மேலும் இதில் சில முக்கிய விதிமுறைகளையும் வனத்துறை அறிவித்துள்ளது. அவையாவன,
1. மலையேற காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே அனுமதி.
2. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களுக்கு அனுமதி இல்லை.
3. செல்லும் வழியில் உள்ள மலைப்பாதை நீரோடைகளில் குளிக்க கூடாது.
4. இரவில் கோவிலில் தங்குவதற்கு அனுமதி இல்லை.
இதில் மேலும் முக்கியமான ஒன்றாக மலை ஏறும் சமயங்களில் மழைக்கான அறிகுறிகள் தென்பட்டால் அனுமதி கிடையாது.
ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு கோவிலுக்கு அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் அவர்களுக்கு தேவையான தண்ணீர் மற்றும் பிற வசதிகளை மாவட்ட வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் இணைந்து செய்துள்ளன.