இதனுடன் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே இனி சம்பளம்! 100 நாள் வேலை திட்டத்தில் வெளிவந்த புதிய மாற்றம்!
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்த போதில் இருந்து ஆண்டிற்கு நூறு நாட்கள் வேலை வழங்கும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி வேலை உறுதி திட்டம் கொண்டுவரப்பட்டது. அதனை அடுத்து கடந்த 25ஆம் ஆண்டு சட்டம் கொண்டுவரப்பட்டு குடும்பத்தில் ஒருவருக்கு 100 நாட்கள் வேலை கொடுக்கப்பட்டு அதற்கான ஊதியமும் வழங்கப்பட்டு வருகின்றது.
மேலும் இதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட ஒருங்கிணைப்பாளர் என்ற பணி ஏற்படுத்தப்பட்டு மேற்பார்வை செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தாலுகா புரத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றம் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் தாருகாபுரம் ஊராட்சியில் 100 நாள் வேலைப்பள்ளிகளுக்கு ஒருங்கிணைப்பாளர் அவரே 90 நாட்கள் பணி நாட்கள் கடந்து கடந்த ஏழு மாதங்களாக பணியில் தொடர்ந்து உள்ளார். 100 நாள் பணியாளர் அரசு நில வேலையை விட்டு தனி நபர் விவசாய நிலத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதோடு கிராம ஊராட்சி வேலையும் பாதிக்கப்படுகின்றது என அந்த மனுவில் கூறியிருந்தார்.
அதற்கு உரிய நடவடிக்கை துறை ரீதியாக எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்திருந்தார். அந்த வழக்கு கடந்த டிசம்பர் மாதம் விசாரணைக்கு வந்தது அப்போது நீதிபதிகள் விசாரித்து ஊராட்சி 100 நாள் பணியாளர்களின் ஆதார் விவரங்கள் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளது. அவர்களின் வேலைக்குரிய ஊதியத்தை நேரடியாக வழங்கப்படாமல் வங்கி மூலம் மட்டுமே வழங்கப்பட்டு வருவதோடு பணிகளை முறையாக மேற்கொள்வதற்கான நடவடிக்கை செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
அதனை அடுத்து பேசிய நீதிபதிகள் தனியார் நிலத்தில் பணியாளர்கள் வேலை செய்வதற்கான புகைப்பட ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஊரக வளர்ச்சி திட்ட வேலைகள் முறையாக நடக்கிறதா என்பது தொடர்பாக சந்தேகம் எழுந்துள்ளது. அதனால் இந்த வழக்கு தொடர்பான முறையான விவரங்களை ஊரக வளர்ச்சி துறை செயலர் சார்பில் அறிக்கையாக அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்து.
அந்த வழக்கை இந்த ஆண்டு ஜனவரி 4 தேதி விசாரணைக்கு தள்ளி வைத்தனர். மேலும் 100 நாட்கள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களின் ஊதியத்தை நேரடியாக வங்கிகளில் தான் செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் 100 நாள் வேலைத்திட்டத்தில் ஊதியம் பெறுவதற்கு ஆதாரங்கள் கொண்டு சம்பளம் வழங்கும் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மத்திய ஊரக மேம்பாட்டு துறை தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தில் இதுவரை 42 லட்சம் பேர் ஆதார் இணைக்கவில்லை இவர்கள் வருகின்ற மார்ச் 31ஆம் தேதிக்குள் கட்டாயம் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணியாளர்கள் அடிக்கடி வங்கி கணக்கை மாற்றுவதால் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.