ரேஷன் கடைகளில் இனி இந்த பொருட்களையும் பெற்று செல்லலாம்! அமைச்சர் வெளியிட்ட ஹாப்பி நியூஸ்!

0
140
now-you-can-get-these-items-in-ration-shops-happy-news-released-by-the-minister
now-you-can-get-these-items-in-ration-shops-happy-news-released-by-the-minister

ரேஷன் கடைகளில் இனி இந்த பொருட்களையும் பெற்று செல்லலாம்! அமைச்சர் வெளியிட்ட ஹாப்பி நியூஸ்!

பொதுவாகவே அனைத்து ரேஷன் கடைகளிலும் மக்கள் அத்தியாவசிய பொருட்களை இலவசமாக பெற்று செல்கின்றனர். அது மட்டும் இன்றி ரேஷன் அட்டையின் மூலம் அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்டங்களையும் பெற்று வருகின்றனர். அந்த வகையில் கடந்த பொங்கல் பண்டிகைக்கு அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய்  ரொக்க பணம், பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழகத்தின் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் நேற்று சென்னை கொத்தவால் சாவடி தாத்தா முத்தையப்பன் தெருவில் உள்ள கூட்டுறவு பண்டக சாலையின் புதிய ரேஷன் கடையை திறந்து வைத்தார். மேலும் அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பு செய்தியார்களோடு சந்தித்து பேசியபோது அவர் கூறுகையில் தமிழ்நாட்டில் மொத்தம் 35 ஆயிரத்து 941 நியாய விலை கடைகள் செயல்பட்டு வருகின்றது.

இதில் 3516 ரேஷன் கடைகள் சொந்த கட்டிடத்திலும் 24 179 ரேஷன் கடைகள் பொது கட்டிடங்களிலும் 7952  ரேஷன் கடைகள் வாடகையை கட்டிடங்களிலும் இயங்கி வருகின்றது. மேலும் இந்த ரேஷன் கடைகளுக்கு வரும் பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்காமல் விரைந்து பொருட்களை வாங்கி செல்வதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதன் பிறகு ரேஷன் கடைகளில் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் மட்டும் இல்லாமல்  மினி சூப்பர் மார்க்கெட் மூலம் தேவையான அனைத்து பொருட்களையும் பெறுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் கூட்டுறவு ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 6500 பணியிடங்களுக்கு தற்போது நேர்முகத் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் மதிப்பீடு செய்யப்பட்ட தகுதியுள்ள நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.

author avatar
Parthipan K