இந்த மாவட்டத்தில் மட்டும்  ஜனவரி 16 ஆம் தேதி இறைச்சி கடைகள் செயல்பட தடை! மீறினால் நடவடிக்கை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு!

Photo of author

By Parthipan K

இந்த மாவட்டத்தில் மட்டும்  ஜனவரி 16 ஆம் தேதி இறைச்சி கடைகள் செயல்பட தடை! மீறினால் நடவடிக்கை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு!

தமிழர்களுக்கே உரிய பாண்டியனா பொங்கல் திருநாளை மக்கள் அனைவரும்  கொண்டாடும் விதமாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ 1000 பணம், பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்கபட்டு வருகின்றது.அதனையடுத்து வெளியூர்களில் பணிபுரியும் மக்கள் அவரவர்களின் சொந்த ஊரில் பொங்கல் விடுமுறையை கொண்டாடுவதற்கும், கூட்ட நெரிசலை தடுபதற்கும் சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும் கூடுதல் சிறப்பு பேருந்து மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கபடுகின்றது.

கடந்த வாரம் இதற்கான முன்பதிவு தொடங்கிய நிலையில் ஆம்னி பேருந்துகளை விட அரசு பேருந்துகளில் தான் விரைவாக இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த அறிவிப்பில் வரும் ஜனவரி 16 ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டம் முழுவதும் இறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

என கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.மேலும் ஜனவரி 16 ஆம் தேதி ஆடு,மாடு,கோழி,பன்றி உள்ளிட்ட இறைச்சி கடைகள் செயல்பட அனுமதி இல்லை.இந்த உத்தரவை மீறி சட்ட விரோதமாக இறைச்சி கடைகள் செயல்பட்டால் கடையின் உரிமையாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.