தொடங்கியது ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0!! முதல்வரின் அசத்தல் திட்டம்!!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி கஞ்சா வேட்டை 4.0 அதிரடி நடவடிக்கை தமிழகம் முழுவதும் ஏப்ரல் 30ம் தேதி முதல் நடைபெற்று வருவதாக காவல்துறை தலைமை இயக்குநர் அறிவித்துள்ளார்.
கடந்த மூன்று நாட்களில் தமிழகம் முழுவதும் 72 கஞ்சா வியாபரிகள் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 66 கிலோ கஞ்சா மற்றும் 15 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறை தலைமை இயக்குநர் செய்தி குறிப்பு வாயிலாக தெரிவித்துள்ளார்.
மேலும், கஞ்சா விற்பனையில் தொடர்புடைய இரண்டு நபரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும், மாநகர காவல் ஆணையர்களும் கஞ்சா பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்களின் மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கஞ்சா பதுக்கி வைப்பவர்கள். விற்பவர்கள் பற்றி 044-28447701 என்ற தொலைபேசி எண்ணிலும், tndgpcontrolroom@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமும் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்கள் குறித்த இரகசியம் காக்கப்படுவதுடன், தக்க வெகுமதியும் வழங்கப்படும் என காவல்துறை தலைமை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

