பாக்சிங் டே டெஸ்ட் அடிலெய்டுக்கு மாற்ற வாய்ப்பு

Photo of author

By Parthipan K

உலகம் முழுவதும் கொரோனா 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அது மட்டுமின்றி விளையாட்டு துறையிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மே மாதமே தொடங்க வேண்டிய ஐ.பி.எல் இந்தியாவில் கொரானோ பரவல் காரணமாக ஐக்கிய அமிரகத்தில் நடைபெறும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்திய அணி டிசம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செய்ய உள்ளது.

மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் டிசம்பர் 26-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடக்கிறது. இந்த டெஸ்ட் ‘பாக்சிங் டே’ என்ற பாரம்பரிய பெயரில் அழைக்கப்படுகிறது. மெல்போர்னை உள்ளடக்கிய விக்டோரியா மாகாணத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாலும், ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதாலும் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் மெல்போர்னில் இருந்து அடிலெய்டுக்கு மாற்றப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின.