முடிவை மாற்றிக்கொண்ட ஓ.பி.எஸ்! அடுத்த நடவடிக்கை என்ன?

0
138

கடந்த 28 ஆம் தேதி நடந்த அதிமுக கட்சி பொதுக் கூட்டத்தின் போது, முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு உள்ளது.அப்போது ஓபிஎஸ் சார்பில் குறைந்த அளவிலே குரல் எழுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

சில தினங்களுக்கு முன் ஓபிஎஸ் அவர்கள் பெரியகுளத்தில் இருக்கும் தனது வீட்டிற்கு சென்றிருந்தார். அவரை அங்கு சென்று சந்தித்த அதிமுக கட்சி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆலோசனை நடத்தினர். தற்போது அக்டோபர் 7 ஆம் தேதியன்று முதல்வர் வேட்பாளர் யார் என்ற அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.

இந்நிலையில் 6ஆம் தேதி அதிமுக கட்சி உறுப்பினர்கள் வேட்பாளர்கள் என அனைவரும் ஒன்றுகூடி முதல்வர் வேட்பாளர் யார் என்று ஒருமித்த முடிவை எடுத்து பின்னர் அதை 7ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே கூறியுள்ளார்.

இதையடுத்து நாளை ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் வருகை தர மாட்டார் என்று தகவல்கள் வெளியாகி வந்தது. ஆனால் தற்போது ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் பெரியகுளத்தில் இருந்து இன்று சென்னை புறப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleபங்குச்சந்தையில் டி.சி.எஸ் நிறுவனம் புதிய சாதனை !!
Next articleகொரோனா தொற்றின் தற்போதைய நிலை! மகிழ்ச்சியில் மக்கள்!